லைஃப்ஸ்டைல்

சத்து நிறைந்த மேத்தி ஆம்லெட்

Published On 2017-03-01 05:18 GMT   |   Update On 2017-03-01 05:18 GMT
டயட்டில் இருப்பவர்கள் காலையில் கோதுமை பிரட்டுடன் இந்த ஆம்லெட்டையும் சேர்த்து சாப்பிடலாம். இப்போது இந்த மேத்தி ஆம்லெட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

முட்டை - 3
வெந்தயக்கீரை - அரை கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
ப.மிளகாய் - 1
சீரகம் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு



செய்முறை :

* வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும்.

* வெந்தயக்கீரை, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாயை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் வெந்தயக்கீரையை போட்டு பாதியளவு வேகும் வரை வதக்கிய பின் இறக்கி வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக்கரு, வதக்கிய பொருட்கள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் முட்டையை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

* சத்து நிறைந்த மேத்தி ஆம்லெட் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News