லைஃப்ஸ்டைல்

சத்து நிறைந்த பாசிப்பருப்பு சுண்டல்

Published On 2017-02-28 07:34 GMT   |   Update On 2017-02-28 07:34 GMT
அதிகளவு சத்துக்கள் நிறைந்த பாசிப்பருப்பை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று பாசிப்பருப்பை வைத்து எளிய முறையில் சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பாசிப்பருப்பு - ஒரு கப்,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,  
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை :

* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து, 2 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் போட்டு வேகவைத்து தண்ணீரை வடித்து வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், பெருங்காயத்தூள்  போட்டு தாளித்த பின் வேக வைத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறவும்.

* கடைசியாக இறக்கும் போது தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பாசிப்பருப்பு சுண்டல் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News