லைஃப்ஸ்டைல்

வயிற்று புண்ணை குணமாக்கும் மணத்தக்காளிக்கீரை பொரியல்

Published On 2017-02-25 07:40 GMT   |   Update On 2017-02-25 07:40 GMT
வாய், வயிற்றுப்புண் இருப்பவர்கள் மணத்தக்காளிக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இன்று மணத்தக்காளிக்கீரை பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

மணத்தக்காளிக்கீரை - ஒரு கட்டு,
வெங்காயம் - 2
தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்,
கடுகு, உளுந்தம்பருப்பு, - தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மணத்தக்காளி கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய கீரையை சேர்த்து வதக்கவும்.

* கீரை நன்றாக வெந்ததும் கடைசியாக இறக்கும் போது தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

* சூப்பரான மணத்தக்காளிக்கீரை பொரியல் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News