லைஃப்ஸ்டைல்

சத்து நிறைந்த வரகு - கோதுமை பணியாரம்

Published On 2017-02-03 03:32 GMT   |   Update On 2017-02-03 03:32 GMT
இன்று காலை சிற்றுண்டியாக சிறுதானியங்களில் ஒன்றான வரகு மாவுடன் கோதுமை மாவை சேர்த்து சத்துநிறைந்த பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

வரகரிசி மாவு - ஒரு கப்,
கோதுமை மாவு - அரை கப்
வெல்லம் அல்லது கருப்பட்டி - அரை கப்,
வாழைப்பழம் - 2,
எண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை :

* வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் வரகரிசி மாவு, கோதுமை மாவுடன் மசித்த வாழைப்பழம், வெல்லம் அல்லது கருப்பட்டி வடிகட்டிய கரைசல் சேர்த்து இட்லி மாவுப் பதத்துக்குக் கலக்க வேண்டும்.

* குழிப்பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் விட்டு மாவை ஊற்றவும்.

* இருபுறமும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

* வரகு - கோதுமை பணியாரம் தயார்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News