லைஃப்ஸ்டைல்

செரிமானக் கோளாறை குணமாக்கும் ஓமக் கஞ்சி

Published On 2017-01-21 03:23 GMT   |   Update On 2017-01-21 03:23 GMT
செரிமான கோளாறு, வயிறு உப்புசம், வயிறு தொடர்பான பிரச்சனைகள் அனைத்தையும் இந்த கஞ்சி குணப்படுத்தும். இந்த கஞ்சியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி நொய் - கால் கப்
ஓமம் - 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
மோர் - 1 கப்

செய்முறை :

* வாணலியில் ஓமத்தையும் புழுங்கல் அரிசியையும் தனித்தனியாக வறுத்துக்கொள்ளுங்கள்.

* புழுங்கல் அரிசியை ஒரு கப் தண்ணீரில் உப்பு சேர்த்துக் குழைய வேகவையுங்கள்.

* ஓமத்தை மிக்ஸியில் பொடித்து, அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடுங்கள். நன்றாக கொதித்ததும் வடிகட்டுங்கள்.

* இந்த ஓமத் தண்ணீருடன் வேகவைத்துள்ள கஞ்சியில் சேர்த்துப் 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும். பரிமாறுங்கள்.

* கடைசியாக அதனுடன் மோர் சேர்த்தும் குடிக்கலாம்.

* வயிறு உப்புசத்தையும் செரிமானக் கோளாறையும் இந்தக் கஞ்சி சீராக்கும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News