லைஃப்ஸ்டைல்

சத்தான வெந்தயக்கீரை பருப்பு சப்ஜி

Published On 2017-01-17 05:07 GMT   |   Update On 2017-01-17 05:07 GMT
வெந்தயக்கீரையை உணவில் தினமும் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. வெந்தயக்கீரை, பருப்பை வைத்து சப்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கடலைப்பருப்பு - கால் கப்
வெந்தயக்கீரை - 3 கட்டு
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 5 பல்
மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்

தாளிக்க :

சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

* கடலைப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து, குழையாமல் வேகவையுங்கள்.

* கீரையை சுத்தம் செய்து கொள்ளவும்.

* பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின் பூண்டை சேர்த்து வதக்கவும்.

* பூண்டு வதங்கியதும் வெங்காயத்தையும் சேர்த்து வதக்குங்கள்.

* அடுத்து அதில் கீரை, மிளகாய்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, பருப்பை சேர்க்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

* கீரை நன்றாக வெந்தவுடன் எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து கிளறி இறக்குங்கள்.

* வெந்தயக்கீரை பருப்பு சப்ஜி ரெடி.

* தண்ணியாக இல்லாமல் சிறிது கெட்டியாக இருந்தால் தான் இந்த சப்ஜி சூப்பரான இருக்கும்..

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News