லைஃப்ஸ்டைல்

வயிறு கோளாறுகளை சரிசெய்யும் இஞ்சி தயிர் பச்சடி

Published On 2016-12-09 03:34 GMT   |   Update On 2016-12-09 03:34 GMT
வயிற்று உபாதை உள்ளவர்கள் இந்த இஞ்சி தயிர் பச்சடியை அடிக்கடி செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று கீழே விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

இஞ்சி - 50 கிராம்,
தேங்காய் துருவல் - ஒரு கப்,
பச்சை மிளகாய் - 2,
சீரகம் - அரை டீஸ்பூன்,
கடுகு -  அரை ஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
தயிர் - ஒரு கப்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

* சுத்தம் செய்த இஞ்சி, தேங்காய் துருவல், பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்

* ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுது, உப்பு, தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து தயிர் கலவையுடன் சேர்த்து கலக்கிப் பரிமாறவும்.

* இஞ்சி தயிர் பச்சடி ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News