லைஃப்ஸ்டைல்

சத்தான சுவையான அரைக்கீரை குழம்பு

Published On 2016-12-07 08:36 GMT   |   Update On 2016-12-07 08:36 GMT
தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இப்போது அரைக்கீரை குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :

அரைக்கீரை - 1 கட்டு
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 5 பல்
தக்காளி - 4
சின்ன வெங்காயம் - 10
கடுகு - அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - அரை ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

* அரைக்கீரையை நன்கு சுத்தம் செய்து கழுவி ஆய்ந்து நறுக்கி கொள்ளவும்.

* பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து கொள்ளவும்.

* தக்காளி மற்றும் பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* குக்கரில் கீரை, பூண்டு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், தக்காளி அனைத்தையும் போட்டு சிறிது தண்ணீர் விட்டு 3 விசில் வந்ததும் இறக்கி உப்பு சேர்த்து மத்தினால் நன்கு கடைந்து கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் கடைந்து வைத்த கீரை கலவையை போட்டு கிளறி இறக்கி பரிமாறவும்.

* சுவையான, ஆரோக்கியமான “அரைக்கீரை குழம்பு” தயார்.

* இதை சாதத்தோடு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News