லைஃப்ஸ்டைல்

வாழைப்பழம் பாதாம் ஸ்மூத்தி

Published On 2016-11-23 02:51 GMT   |   Update On 2016-11-23 04:46 GMT
வாழைப்பழம் பாதாம் ஸ்மூத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

பொடித்த பாதாம் தூள் - 2 ஸ்பூன்
அரைத்த பாதாம் விழுது - கால் கப்
குளிர்த்த பால் - 1 கப்
லவங்கப்பட்டை பொடி - கால் ஸ்பூன்
ஐஸ் கியூப்ஸ் - 10
தேன் - 1 ஸ்பூன்
வாழைப்பழம் - 1

செய்முறை:

* வாழைப்பழத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* மிக்சியில் வாழைப்பழம், தேன், ஐஸ் கியூப்ஸ், பாதாம் விழுது மற்றும் குளிர்ந்த பால் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

* அரைத்த ஜூஸை கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதன் மேல் லவங்கப்பட்டை பொடி மற்றும் பாதாம் பொடியை தூவி பருகவும்.

* சத்தான சுவையான வாழைப்பழம் - பாதாம் ஸ்மூர்தி தயார்.

Similar News