லைஃப்ஸ்டைல்

சத்தான கேரட் - முட்டை பொரியல்

Published On 2016-09-30 02:19 GMT   |   Update On 2016-09-30 02:20 GMT
கேரட் பொரியலில் தேங்காய்ப்பூ அல்லது வெந்த பருப்பு சேர்ப்போம். அதற்கு பதிலாக இதில் முட்டையை ஊற்றி செய்வதால் சுவையாக இருக்கும்.
தேவையானப் பொருள்கள்:

கேரட் - 1
சின்ன வெங்காயம் - 5
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - சிறிது
முட்டை - 2
உப்பு - தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலை பருப்பு
கறிவேப்பிலை

செய்முறை :

* வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும். 

* கேரட்டை துருவி கொள்ளவும்.

* ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கித் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

* பிறகு கேரட், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

* கேரட் வதங்கியதும் அதில் முட்டையை உடைத்து ஊற்றிக் கிளறிவிடவும்.

* இரண்டும் சேர்ந்தார் வெந்து பூப்போல் வந்ததும் இறக்கவும்.

* சுவையான கேரட் - முட்டை பொரியல் ரெடி.

* இது எல்லா வகையான சாதத்திற்கும் நன்றாக இருக்கும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News