லைஃப்ஸ்டைல்

சுவையான சத்தான மக்காச்சோள சுண்டல்

Published On 2016-09-23 05:50 GMT   |   Update On 2016-09-23 05:51 GMT
மக்காச்சோளத்தில் அதிகளவு சத்துக்கள் உள்ளது. இதை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. மக்காச்சோள சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : 

மக்காச்சோளம் - ஒரு கப், 
கடுகு - கால் டீஸ்பூன், 
உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன், 
சீரகம் - கால் டீஸ்பூன் 
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், 
கறிவேப்பிலை - சிறிதளவு, 
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், 
எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

அரைக்க: 

இஞ்சி - சிறிய துண்டு, 
பச்சை மிளகாய், பூண்டு பல் - தலா 2, 
சோம்பு - கால் டீஸ்பூன், 
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: 

* மக்காச் சோளத்தை 8 மணி நேரம் ஊற வைத்த பின் குக்கரில் வேக வைக்கவும். 

* அரைக்க கொடுத்துள்ளவற்றை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். 

* வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெந்த சோளம், அரைத்த மசாலா, உப்பு சேர்த்து, தண்ணீர் சிறிது தெளித்து நன்கு கிளறி விடவும். 

* 2 நிமிடம் கழித்து தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.

* சுவையான சத்தான மக்காச்சோள சுண்டல் ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News