லைஃப்ஸ்டைல்

சுவையான சத்தான வரகரிசி பிரியாணி

Published On 2016-09-23 02:56 GMT   |   Update On 2016-09-23 02:57 GMT
சிறுதானியங்களை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. வரகரிசி பிரியாணி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

வரகரிசி - 100 கிராம்
கேரட் - 25 கிராம்
பீன்ஸ் - 25 கிராம்
பட்டாணி - 25 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 10 கிராம்
மிளகாய் - 2 கிராம்
பட்டை, ஏலம் கிராம்பு - சிறிதளவு
கரம் மசாலா - 5 கிராம்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* காய்கறிகள், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* குக்கரில் எண்ணெயை ஊற்றி சூடானதும் பட்டை, ஏலம், கிராம்பு ஆகியவற்றைப் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

* அடுத்து அதில் இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய் போட்டு நன்றாக வதக்கிய பின்னர் தக்காளியை போட்டு வதக்கவும். 

* தக்காளி நன்றாக வதங்கியதும அதில் காய்கறிகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். 

* அடுத்து அதில் கரம்மசாலா சேர்த்து சிறிது கிளறிய பின்னர் 300 மில்லி தண்ணீரைச் சேர்க்கவும். நன்கு கழுவி களைந்த வரகு அரிசியை அதில் போடவும். 

* தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கரை மூடிவிடவும். 3 அல்லது 4 விசில் வரும் வரை வேகவைத்து இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

* வரகரிசி பிரியாணி ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News