லைஃப்ஸ்டைல்

சுவையான சூப்பரான திணை உப்புமா

Published On 2016-09-21 04:53 GMT   |   Update On 2016-09-21 04:54 GMT
உங்களுக்கு உடல் நலத்தின் மீது அதிக அக்கறை இருந்தால், திணையை காலை உணவாக எடுத்து வாருங்கள்.
தேவையான பொருட்கள் : 

திணை - 2 கப் 
தண்ணீர் - 4 கப் 
வெஜிடபிள் ஸ்டாக் - 2 கப்
ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன் 
வெங்காயம் - 2 
உப்பு - தேவையான அளவு 
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன் 
சிவப்பு குடமிளகாய் - 1 
மஞ்சள் குடமிளகாய் - 1 
பூண்டு - 6 பற்கள் 

செய்முறை : 

* வெங்காயம், குடமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* திணையை வெறும் கடாயில் சிறிது வறுத்து வைக்கவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கிளறவும். 

* பின் அதில் சிவப்பு மற்றும் மஞ்சள் குடைமிளகாயை சேர்த்து குறைவான தீயில் வேக வைக்கவும். 

* பின்பு அதில் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தண்ணீர் மற்றும் வெஜிடபிள் ஸ்டாக் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். 

* பிறகு அதில் திணையை போட்டு, மூடி வைத்து 30 நிமிடம் வேக வைக்கவும். தினை நீரை உறிஞ்சி நன்கு வெந்ததும், தீயை அணைத்து 5-10 நிமிடம் கழித்து பரிமாறவும்.

* சுவையான சூப்பரான திணை உப்புமா ரெடி.

* இதில் நீங்கள் விருப்பமான காய்கறிகளை வேண்டுமானால் சேர்த்து கொள்ளலாம்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News