லைஃப்ஸ்டைல்
வயதானவர்களுக்கு வரும் மூட்டு வலி

வயதானவர்களுக்கு வரும் மூட்டு வலியும், உணவுமுறையும்

Published On 2020-03-01 04:30 GMT   |   Update On 2020-02-25 06:16 GMT
வயதானவர்களுக்கு மூன்று முக்கிய மூட்டு தேய்மானங்கள் ஏற்படுகின்றன. இதற்கான காரணத்தையும், உணவுமுறையும் பார்க்கலாம்.
வயதானவர்களுக்கு மூன்று முக்கிய மூட்டு தேய்மானங்கள் ஏற்படுகின்றன.

1. ஆஸ்டியோ ஆர்த்தரைடிஸ்:-ஆஸ்டியோ என்றால் எலும்பு என்று பொருள். மூட்டுக் களில் இருக்கும் எலும்புகள் தேய்ந்துவிட்டால் அதற்கு ஆஸ்டியோ ஆர்த்தரைட்டீஸ் என்று பெயர். இவ்வகை தேய்மானம் வந்தால் நடப்பதற்கும், உட்கார்ந்து எழுவதற்கும் மிகவும் கஷ்டமாகயிருக்கும். நடந்தால் மூட்டுக்களில் வலி, மூட்டு வலியால் இரவு தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

2. ருமடாய்ட் ஆர்த்தரைடிஸ்:- இந்த ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ் எந்த வயதினருக்கு வேண்டுமானாலும் வரலாம். மூட்டு, மணிக்கட்டு, கை கால் விரல்கள் போன்ற இடங்களில் உள்ள மூட்டுக்களில் இந்த நோயின் பாதிப்பு இருக்கும். உடலில் உள்ள மூட்டுக்கள், மணிக்கட்டில் விரல்களில் வீக்கம் ஏற்பட்டு இறுக்கிப் பிடிப்பது போல் இருந்தால் அது ருமடாய்ட் ஆர்த்தரைட்டிஸ்ஸின் அறிகுறியாகும்.

3. எலும்பு தேய்மானம்:- வயதானவர் களுக்கு, குறிப்பாக 40 வயதிற்கு மேற் பட்டவர்களை இந்நோய் தாக்குகின்றது. குறிப்பாக பெண்களுக்கு அதிகமாக பாதிப்பு ஏற்படுகின்றது. மெனோபாஸ், முதுமை, வேலை எதுவும் செய்யாமல் எப்பொழுதும் சோர்வாக இருத்தல் போன்ற காரணங்களால் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

மூட்டுவலிக்கு முக்கிய காரணங்கள்:- அதிக எடை, மூட்டுத் தேய்மானம், கால்சியம் பற்றாக்குறை, ரத்த சோகை, அஜீரணத் தொல்லை, எந்த உடற்பயிற்சியும் செய்யாதிருத்தல், சத்தான உணவு உண்ணாமலிருத்தல், அதிகமாக போகத்தில் ஈடுபடுதல்.

மூட்டு வலி என்றால் என்ன? எதனால் ஏற்படுகின்றது. அதன் வகைகள் பற்றி தெரிந்தால், நீங்கள் எந்த வகையில் இருக்கின்றீர்கள் என்பதை முதலில் உணரலாம். இனி கவலையை விடுங்கள். மூட்டுவலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எளிமையான யோகாசனங்கள், உணவு வகைகள் மூலம் நாம் நலமாக வாழும் வழியினைப் பார்ப்போம்.

யோகாசனங்கள்:-- நம் சித்தர்கள் அளித்த யோகக் கலைகள் மனித உடலை வளப்படுத்தும், நலம் சேர்க்கும். மனதில் அமைதி கிடைக்கும். உடலில் உள்ள நரம்பு மண்டலம், மூச்சோட்ட மண்டலம், ஜீரண மண்டலம் சிறப்பாக இயங்கச் செய்கின்றது. யோகசனங்கள் செய்வதால் உடலில் உள்ள கழிவுகள் சரியாக வெளியேருகின்றது. தச வாயுக்களும் சரியாக இயங்கச் செய்யும். யோகாசனம் செய்தால் மலச்சிக்கல் வராது. யோகாசனம் செய்யாதவர்களுக்கு மலச்சிக்கல் வரும். கழிவுகள் ஒழுங்காக வெளியேறாது. அதனால் கழிவுகளின் அசுத்தக்காற்று மூட்டுக்களில் வாயுவாக செயல்பட்டு மூட்டின் இயக்கத்தைப் பாதிக்கும்.

நமது மூட்டுக்களை சிறப்பாக இயங்கச் செய்ய எளிமையான யோகாசனங்கள் உள்ளன. அதனை தினமும் காலை, மாலை செய்தால் மூட்டுவலி ஓடிவிடும்.

மூட்டுவலி உள்ளவர்கள் உணவு வகை:- தங்களது உணவில் தினமும் 5 வெண்டைக் காய்கள் பச்சையாக கழுவி நன்கு மென்று கூழாக்கி சாப்பிடவும்.
பூண்டு, வெங்காயம் உணவில் அதிகம் சேர்க்கவும். இதில் கந்தகச்சத்து அதிகம் உள்ளது. மேற்குறிப்பிட்ட உணவுப் பொருட்களால் தேய்மானம் அடைந்த எழும்புகள், இணைப்புத் திசுக்கள் வலுப்பெறும்.

அன்னாச்சிப் பழத்திலுள்ள சத்து மூட்டு அழற்சியைக் குறைக்கும் தன்மையுடையது. எனவே அப்பழத்தினை அதிகம் சேர்க்கவும். உணவில், பழங்களில் வைட்டமின் சி சத்து, மூட்டுகள் தேய்மானம் அடைவதைத் தள்ளிப்போடும். எனவே சி சத்து அதிகமுள்ள உணவுகளான எலுமிச்சைபழம், காலிஃபிளவர், பீட்ரூட், ஸ்ட்ராபெர்ரி ஆகியவற்றை அதிகம் அன்றாட உணவில் சேர்க்கவும்.

புளி, ஊறுகாய், டின்களில் அடைக்கப்பட்ட துரித உணவுகள், தக்காளிப்பழம், பால், மாமிசம் - ஆட்டுக்கறி, கோழிக்கறி போன்ற கொழுப்பு பொருட்களைத் தவிர்க்கவும். சாப்பிடவேண்டிய பழங்கள் தர்பூசணி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம்.வெண்டைக்காய், கேரட், வெள்ளரிக்காய், பீன்ஸ். பிரண்டை, முடக்கத்தான் கீரை.

இத்துடன் கால்பாதக் குளியல்

ஒரு பிளாஸ்டிக் டப்பில் இலேசான சூடு வெந்நீர் அதில் ஒரு சிட்டிகை கல் உப்பு போட்டு கரைத்து அந்த டப்பில் உங்கள் இரு பாதங்களையும் வைத்து அமைதியாக 10 நிமிடங்கள் இருக்கவும். பின் கால்களை வெளியில் எடுத்து பாதத்தை துணியால் மெதுவாகத் துடைக்கவும். இதை வாரம் மூன்று முறை செய்யவும்.

இந்த கால் பாதக்குளியல், பாதங்களில், விரல்களில், நகத்தினுள், உள்ள கண்ணுக்குத் தெரியாத அழுக்குகள், கிருமிகளை அழித்துவிடும். உடலில் கால் பகுதியில் உள்ள உஷ்ணம் நீங்கிவிடும். கால் பாதவலி, கணுக்கால் வலி, மூட்டுவலிகள் படிப்படியாக குறைந்துவிடும். எளிமையான பிராணசக்தி பெறும் தியான முறை:- ஒரு நாற்காலியில் அமர்ந்துக்கொள்ளுங்கள். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கால்களை தொங்கவிட்டு அமரவும்.

உங்கள் இரு உள்ளங்கைகளை, இரு கால் முட்டின்மேல் வைத்துக்கொள்ளுங்கள். கண்களை மூடி இரு நாசிவழியாக மெதுவாக மூச்சை உள் இழுத்து, மிக மெதுவாக மூச்சை வெளியிடவும். அப்படி மூச்சை வெளியிடும்பொழுது உங்கள் உள்ளங்கை மூலமாக பிராணசக்தி இரண்டு மூட்டுக்குள்ளும் பரவுவதாக எண்ணுங்கள் மூட்டின் உள் பகுதி நன்கு வலுப்பெறுகின்றது. அதில்; வெப்ப ஓட்டம், மூச்சோட்டம், இரத்த ஓட்டம் நன்றாக இயங்குகின்றது என்று எண்ணுங்கள். இதுபோல் 10 தடவைகள் செய்யவும். மூட்டுவலி உங்கள் உடலைவிட்டு ஓடி விடும்.
Tags:    

Similar News