லைஃப்ஸ்டைல்

எலுமிச்சை ஜூஸ் பக்கவிளைவுகள்

Published On 2018-04-11 08:56 GMT   |   Update On 2018-04-11 08:56 GMT
எலுமிச்சை ஜூஸ் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் சத்து மிக்க பானமாக விளங்குகிறது. ஆனால் அளவுக்கு அதிகமாக எலுமிச்சை ஜூஸ் பருகுவதையும் தவிர்க்க வேண்டும்.
எலுமிச்சை ஜூஸ் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் சத்து மிக்க பானமாக விளங்குகிறது. ஆனால் அளவுக்கு அதிகமாக எலுமிச்சை ஜூஸ் பருகுவதையும் தவிர்க்க வேண்டும். தினமும் 3 டம்ளருக்கு மேல் எலுமிச்சை ஜூஸ் பருகினால் பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். அளவுக்கு அதிகமாக எலுமிச்சை ஜூஸ் பருகுவது பல் அரிப்புக்கு வழிவகுத்துவிடும்.

அதனால் எலுமிச்சை ஜூஸ் பருகியதும் வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிப்பது நல்லது. பல் சார்ந்த பிரச்சினை இருப்பவர்கள் அளவுக்கு அதிகமாக எலுமிச்சை ஜூஸ் பருகுவதை தவிர்க்கவேண்டும். எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி சிறுநீரின் உற்பத்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. அதேபோல் உடலில் அளவுக்கு அதிகமாக இருக்கும் சோடியம் மற்றும் நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது. எனினும் வழக்கத்தைவிட அதிகமாக சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படுவதை உணர்ந்தால் எலுமிச்சை ஜூஸ் பருகுவதை குறைத்துக்கொள்ள வேண்டும்.

அளவுக்கு அதிகமாக எலுமிச்சை ஜூஸ் குடித்தால் தலைவலி, குமட்டல், வாந்தி போன்ற பாதிப்புகளும் உருவாகும். உடல் பலவீனம், சோர்வு, மந்தமான உணர்வும் ஏற்படும். சரும பிரச்சினையால் பாதிப்புக்குள்ளானவர்கள் காலையில் எலுமிச்சை ஜூஸ் பருகுவது பலன் தராது. நெஞ்சரிச்சலால் அவதிப்படுபவர்கள் எலுமிச்சை ஜூஸ் பருகுவதை தவிர்க்க வேண்டும். அது பாதிப்பை அதிகப்படுத்திவிடும்.
Tags:    

Similar News