லைஃப்ஸ்டைல்

பசிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்

Published On 2017-08-30 08:11 GMT   |   Update On 2017-08-30 08:12 GMT
இரவில் அதிகமாகச் சாப்பிடுவதாலும், நேரம் கழித்து சாப்பிடுவதாலும், துரித உணவுகளைச் சாப்பிடுவதாலும் காலையில் பசி உணர்வு குறைவாகவே இருக்கும்.
முந்தைய தலைமுறையிலும், இன்றைய கிராமப்புறங்களிலும் இரவு 8 மணிக்குச் சாப்பிட்டு, 9 மணிக்குத் தூங்கி, காலை 5-6 மணிக்குள் எழுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அவர்களுக்கு நன்றாகப் பசிக்கும். சரியாகச் சாப்பிடுவார்கள். ஆரோக்கியமாக இருப்பார்கள். இன்றைக்கு செல்போனும் சோசியல் மீடியாக்களும் பலரது சாப்பாடு, தூக்கத்தை மறக்கச் செய்துவிட்டன.

இரவுச் சாப்பாடு 10 மணிக்கு, இரவுத் தூக்கம் 12 மணிக்கு, காலை எழுவது 8 மணிக்கு என்ற அட்டவணையைப் பின்பற்றுகின்றனர். இதனால் காலையில் நேரமில்லை எனச் சொல்லி, சாப்பிடாமலே செல்வார்கள். இதைத் தொடர்ந்து மதிய உணவு, இரவு உணவு சாப்பிடும் நேரமும் அளவும் மாறுபடும்.

இரவில் அதிகமாகச் சாப்பிடுவதாலும், நேரம் கழித்து சாப்பிடுவதாலும், துரித உணவுகளைச் சாப்பிடுவதாலும் காலையில் பசி உணர்வு குறைவாகவே இருக்கும். பசி உணர்வே இல்லாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக துரித உணவுகளில் இருக்கும் மைதா, சீஸ், சமையல் சோடா போன்றவை செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்வதோடு, உடலுக்கு அதிக கலோரியைக் கொடுத்து, பசியை அடக்கி, நீண்ட நேரத்துக்குப் பசிஉணர்வே ஏற்படாமல் செய்யும்.



இதுபோன்ற உணவுகளை மதியம் சாப்பிட்டால், இரவில் பசி உணர்வு பாதிக்கும். அலுவலகத்தில் வேலை செய்யும் பலர் பெரும்பாலும் உடல் உழைப்பைக் கொடுக்காததால், துரித உணவுகள் கொழுப்பாக மாறி, பருமன் அதிகமாகக் காரணமாகிறது. தொடர்ந்து இரண்டு நாட்கள் காலை உணவு சாப்பிடாமல் இருந்தால், மூன்றாவது நாள் இயல்பாகவே பசி எடுக்காது.

‘பசி இல்லை’ என்பார்கள். பசி ஏற்படாததற்கும் நாம்தான் காரணம் என்பதையும் மறக்கிறோம். பசி இல்லாவிட்டாலும், இரண்டு நாட்களுக்கு காலையில் கொஞ்சமாவது சாப்பிட்டுப் பாருங்கள். அடுத்த நாள் ஆட்டோமேட்டிக்காக பசி எடுக்கும்!
Tags:    

Similar News