லைஃப்ஸ்டைல்

ஒரு மாதத்தில் உடலில் ரத்தம் அதிகரிக்க சிட்கா வைத்தியம்

Published On 2017-05-04 09:12 GMT   |   Update On 2017-05-04 09:12 GMT
உடலில் ரத்தம் குறைவாக இருப்பவர்கள், அனிமிக்காவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தை அதிகரிக்க செய்வதே சிட்கா வைத்தியம் ஆகும். இதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
உடலில் ரத்தம் குறைவாக இருப்பவர்கள், அனிமிக்காவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தை அதிகரிக்க செய்வதே சிட்கா வைத்தியம் ஆகும்.

இங்கே சிட்கா வைத்திய முறையை பார்க்கலாம் :

ஒரு அகலமான பாத்திரத்தில் 1/2கி விதை நீக்கிய பேரீச்சை பழத்தை போடவும். அதில் சுத்தமான தேன் 1/2கி ஊற்றவும். மேலே குங்கும பூவை போடவும். காலை இளம் வெயிலில் 1/2 மணி நேரம் வைத்து பின்னர் டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளவும். இரவு 7 மணிக்கு 2 பேரீச்சம்பழம் சாப்பிட்டு 1 டம்ளர் சுண்ட காய்ச்சிய பசும்பால் குடிக்கவும்.



அத்திபழ கலவை :

இது தீர்ந்த பிறகு அத்திபழ கலவையை சாப்பிட வேண்டும்.அத்திப்பழ கலவை செய்யும் முறை:

1/2 கிலோ அத்திப்பழம், 1/2 கிலோ தேன் கலந்து அதனுடன் குங்கும பூ போடவும்.
காலை இளம் வெயிலில் 1/2 மணி நேரம் இளம் சூட்டில் வைக்க வேண்டும். பின்னர் அதை எடுத்து டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.
இதில் இருந்து 2 அத்திப்பழம் எடுத்து சாப்பிட்டு 1 டம்ளர் பால் குடிக்க வேண்டும்.
இவற்றை மாறி மாறி எடுக்கும் போது 1 மாதத்தில் அதிரடியாக 1 யூனிட் ரத்தம் உடலில் அதிகரிக்கும்

டாக்டர். ஆர்.பானுமதி
செல்: 73974 07283
Tags:    

Similar News