லைஃப்ஸ்டைல்

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதற்கான காரணங்கள்

Published On 2017-02-13 08:55 GMT   |   Update On 2017-02-13 08:55 GMT
சில சமயங்களில் திடீரென இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று விரிவாக பார்க்கலாம்.
நீரிழிவு நோய் பெருகி வருகின்றது. அவரவர் வீட்டிலேயே ‘க்ளூகோமீட்டர்’ என்ற கருவியினை பயன்படுத்தி சர்க்கரை அளவினை அறியும் முறையும் பெருகி வருகின்றது. இருந்தாலும் ரத்தத்தில் எந்த அளவு சர்க்கரை இருக்கலாம் என்பதனை அறிவதே நல்லது.

சில சமயங்களில் திடீரென ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுவதற்கு கீழ் கண்டவை கூட காரணமாக இருக்கக் கூடும்.

* காபி, கறுப்பு காபி
* கறுப்பு டீ
* சக்தி பானங்கள்

* சர்க்கரை இல்லாத உணவுகள் (இவற்றில் கார்போஹைடிரேட் அதிகம் இருக்கலாம்)
* சில சைனஸ், சளி மருந்துகள்
* வேலை பளு

* உலர்ந்த பழங்கள்
* ஸ்டீராய் மாத்திரைகள்
* கருத்தடை மாத்திரைகள்

ஆகியவை ஆகும்.

மேலும் மது, அதிக உஷ்ணம், தூக்கமின்மை இவை சர்க்கரையின் அளவினை பாதிக்கக் கூடியவை ஆகும்.

Similar News