லைஃப்ஸ்டைல்

தலைவலியை விரைவில் போக்கும் பாட்டி வைத்தியம்

Published On 2017-01-22 06:03 GMT   |   Update On 2017-01-22 06:03 GMT
தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்க, கண்ட கண்ட மாத்திரையைப் போடுவதைத் தவிர்த்து, நம் பாட்டிமார்கள் பின்பற்றிய வைத்தியங்களை மேற்கொள்ளுங்கள்.
தலைவலியை அனுபவிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். தலைவலி ஒருவருக்கு வந்தால், எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. அந்த அளவில் தலைவலி இருக்கும்.

ஆனால் மாத்திரையை அடிக்கடி சாப்பிட்டால், அதனால் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்க, கண்ட கண்ட மாத்திரையைப் போடுவதைத் தவிர்த்து, நம் பாட்டிமார்கள் பின்பற்றிய வைத்தியங்களை மேற்கொள்ளுங்கள்.

வெற்றிலையை அரைத்து சாறு எடுத்துகொள்ளவும். கிராம்பை தூள் செய்து  அதனை வெற்றிலை சாறுடன் கலந்து பேஸ்ட் போல் செய்து, நெற்றியில் தடவினால், தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பசலைக்கீரையில் தலைவலியைப் போக்கத் தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளது. ஆகவே தலைவலி இருக்கும் போது பசலைக்கீரையை அரைத்து நெற்றியில் தடவினால், தலைவலி நீங்கும்.

துளசி இலைகளை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, தேன் கலந்து குடித்தால், தலைவலி குணமாகும்.

Similar News