லைஃப்ஸ்டைல்

கொலஸ்ட்ரால் குறைய இதை சாப்பிடுங்க

Published On 2016-09-28 02:48 GMT   |   Update On 2016-09-28 02:49 GMT
நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமானால் பல பிரச்சனைக்கு ஆளாகின்றோம்.
கொலஸ்ட்ரால் குறைய எதை உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும் என்பதை கீழே பார்க்கலாம்.

 
கொலஸ்ட்ரால் என்பது கொழுப்பு வகைக் குழுமத்தைச் சார்ந்த மென்மையான மெழுகு போன்ற பொருள்.

உடல் நலம் காக்கவும், உடலின் சில முக்கிய பணிகளைச் செய்யவும் நமது உடலில் உள்ள கல்லீரல் 80% அளவுக்கு கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது. மீதமுள்ளவை நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ரால், இது நாம் சாப்பிடும் அசைவ உணவுகளினால் உற்பத்தி ஆகின்றது.

எனவே நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமானால் பல பிரச்சனைக்கு ஆளாகின்றோம். இந்த பிரச்சனைகளில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தினமும் ஆப்பிள், பீச், பேரிக்காய் போன்ற பழங்களை ஜூஸ் செய்து குடியுங்கள்.

ஆப்பிள், பீச், பேரிக்காய் போன்ற பழங்களில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்துக்கள், விட்டமின் A, B, B1, B2, C, E மற்றும் K போன்ற சத்துக்கள் இருப்பதால் கொலஸ்ட்ராலை குறைப்பதுடன் மேலும் பல நன்மைகள் கிடைக்கின்றன.

நன்மைகள்  :

ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

சரும செல்களின் வயதாகும் தன்மையை குறைத்து, இளமையாக தோற்றமளிக்க செய்கிறது.

இந்த ஜூஸை குடிப்பதால் உடலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகரிக்கும். இதனால், நோய் எதிர்ப்பு திறன் சீராகும்.

இதயம் மற்றும் பற்களின் வலிமையை ஊக்குவிக்கும்.

இரத்தத்தை சுத்திகரிக்க இந்த ஜூஸ் உதவுகிறது.

செரிமானத்தை சீராக்கி, மலமிளக்க பிரச்சனை உண்டாகாமல் பாதுகாக்கிறது.

கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

Similar News