உடற்பயிற்சி
மச்சாசனம்

மூளை நரம்பு மண்டலத்தை நன்றாக இயங்கச்செய்யும் மச்சாசனம்

Update: 2022-05-23 02:39 GMT
மூளை நன்கு இயங்க முதுகுத்தண்டு திடமாக இருக்க வேண்டும். முதுகுத்தண்டுதான் மூளை வழியாக வரும் செய்திகளை நமக்கு உடன் தெரிவிக்க ஒரு பாலமாக அமைகின்றது.
விரிப்பில் நேராகப் படுக்கவும். கைகளின் உதவியால் உச்சந்தலையை தரையில் படும்படி வைத்து கைகளை கால் முட்டி மீது வைக்கவும். படத்தைப் பார்க்கவும். சாதாரண மூச்சில் பத்து வினாடிகள் முதல் 20 வினாடிகள் இருக்கவும். பின் கைகளின் உதவியால் தலையை நேராக கொண்டுவரவும். இரண்டு முறைகள். காலை / மாலை பயிற்சி செய்யவும்.

பலன்கள்

மூளை நரம்பு மண்டலங்கள் மிக நன்றாக இயங்கும். மூளை செல்களுக்கு இரத்த ஓட்டம் நன்கு பாயும். மூளையின் திறனை நாம் உபயோகப்படுத்த வழிவகுக்கும். நுண்ணறிவு என்று கூறும் அறிவுத்திறன் மிளிரும். அதற்கு மூளை நரம்பு மண்டலங்கள் நன்கு இயங்கும் தன்மையை இந்த ஆசனம் கொடுக்கின்றது.

Tags:    

Similar News