குழந்தை பராமரிப்பு

சிறுநீர் கழிக்க அழும் குழந்தை...உஷார்?

Published On 2024-02-09 08:12 GMT   |   Update On 2024-02-09 08:12 GMT
  • கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
  • ஸ்கேன் பரிசோதனை செய்து பார்க்க வேண்டியது அவசியம்.

குழந்தைகள் சிறுநீர் கழிக்கும்போது அழுவது அல்லது சிறுநீர் கழிக்க முடியாமல் சிரமப்படுவது அல்லது சிறிது சிறிதாக சிறுநீர் கழிப்பது போன்ற பிரச்சினைகள் சிறுநீர்ப்பாதையிலோ, சிறுநீர்ப்பையிலோ, சிறுநீரகங்களிலோ கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

 எனவே, நீங்கள் குழந்தைக்கு சிறுநீர் பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனை செய்து பார்க்க வேண்டியது அவசியம். அந்த பரிசோதனைகளின் மூலம் கிருமித்தொற்று உள்ளதா என்றும், அப்படி இருந்தால் எந்த இடத்தில் தொற்று உள்ளது என்றும், எந்த வகையான கிருமித்தொற்று என்றும் தெரிய வரும். அந்த பரிசோதனை முடிவுகளை வைத்து, பிரச்சினைக்கு எந்த ஆன்டிபயாடிக் கொடுக்க வேண்டும் என்பதை மருத்துவர் முடிவுசெய்து பரிந்துரைப்பார்.

 ஆண்குறியின் முன்தோல் துவாரம் சிறியதாக இருப்பது, அடைப்பு (ஃபிமோசிஸ்) ஏற்படவும், சிறுநீர்க் கிருமித் தொற்று ஏற்படவும், பொதுவான காரணமாக இருக்கும். இந்த பிரச்சினையை முன்தோல் நீக்க அறுவை சிகிச்சை எனப்படும் எளிய சிகிச்சையின் மூலம் சரிசெய்யலாம். அடிக்கடி சிறுநீர்த் தொற்று பிரச்சினை ஏற்பட்டாலோ, அடைப்பு அதிகமாக இருந்தாலோ மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரலாம்.

Tags:    

Similar News