லைஃப்ஸ்டைல்

நீங்கள் குறைபிரசவத்தில் பிறந்தவரா? அப்ப இத படிங்க...

Published On 2017-03-29 06:37 GMT   |   Update On 2017-03-29 06:37 GMT
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் குதூகலம் மிக்கவர்கள் தான். அவர்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான விஷயங்கள் பல உண்டு.
குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை நாம் அவசரத்தில் பிறந்தவர்கள் என கிண்டல் செய்வதுண்டு. ஆனால் உண்மையிலேயே குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் குதூகலம் மிக்கவர்கள் தான். அவர்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான விஷயங்கள் பல உண்டு.

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள், தங்களுடைய வாழ்க்கையில் நிறைய சாதனைகளைப் புரிவார்கள் என்கின்றன ஆய்வு முடிவுகள் பல. 37 வாரங்களுக்கு முன்பாகப் பிறக்கும் குழந்தைகள் தான் குறைபிரசவக் குழந்தைகள். அதற்கான காரணங்கள் பல உண்டு.

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் அதிபுத்திசாலிகளாக இருக்கிறார்கள். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூட குறை பிரசவத்தில் பிறந்தவர் தான். குறை பிரசவக் குழந்தைகள் மற்ற சராசரி குழந்தைகளை விட மூளை வளர்ச்சியில் மேம்பட்டு இருக்கிறார்கள்.



இவர்களை ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தைகள் என்று கூட சொல்வதுண்டு. குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகளில் 80 சதவீதத்துக்கும் மேல், அதிக ஆற்றலுடையவர்களாகவும் வெளிப்படைத் தன்மை உடையவர்களாகவும் இருக்கிறார்கள்.

சராசரி குழந்தைகளைவிட குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு படைப்பாற்றல் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களால் அமைதியாக இருக்கவே முடியாது. லொடலொட என்று பேசிக்கொண்டே இருந்தாலும் தங்களுடைய காரியத்தில் கண்ணாய் இருப்பார்கள்.

உடல் ரீதியாகவும் மன ரீதியாவும் உறுதியுடன் இருப்பார்கள். கற்பனைத் திறனும் படைப்பாற்றலும் கலைத்திறனும் அதிகமாகக் கொண்ட ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தைகளாகவே குறைபிரசவக் குழந்தைகள் இருக்கிறார்கள்.

Similar News