லைஃப்ஸ்டைல்

குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு உதவும் கால்சியம்

Published On 2016-10-21 05:01 GMT   |   Update On 2016-10-21 05:01 GMT
குழந்தைகளில் எலும்பு வளர்ச்சிக்கு உதவும் கால்சியம் நிறைந்த உணவுகளை கீழே பார்க்கலாம்.
குழந்தைகளின் சீரான வளர்ச்சிக்கு கால்சியம் சத்து அவசியமான ஒன்று, இதுவே எலும்பு பலத்திற்கு உறுதுணையாக இருக்கிறது.

எனவே குழந்தைகளுக்கு கால்சியம் நிறைந்த உணவுகளை கட்டாயம் கொடுக்க வேண்டும். தினசரி உங்கள் குழந்தைகளின் உணவுகளில் பால் மற்றும் தயிர், மோர், வெண்ணெய், நெய் என பால் பொருட்கள் அதிகம் நிறைந்த பொருட்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதிலிருக்கும் கால்சியம் மற்றும் உயர் ரக புரதச்சத்து எலும்புகள் மற்றும் தசைகளின் வலிமையை அதிகரித்து நன்கு வளர உதவுகிறது.

இதேபோன்று முட்டையில் புரதம் மற்றும் விட்டமின்கள் நிறைந்துள்ளதால் குழந்தைகள் வளர்ச்சிக்கு உதவுகிறது. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் கால்சியம் எலும்புகளுக்கு பலம் சேர்க்கிறது.

சோயா பீன்சில்ஃபோலேட், விட்டமின்ஸ், புரதச் சத்துக்கள், கார்ப்ஸ்இருக்கின்றன. சால்மன், சூரை போன்ற மீன்கள் விட்டமின்டி மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்தவை ஆகும்.

இந்த உணவுகள் குழந்தைகளின் சீரான எலும்பு வளர்ச்சி மற்றும் தசைகளுக்கு வலு சேர்க்கின்றன.

Similar News