வழிபாடு

திருச்செந்தூர் கோவிலில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வெள்ளி குதிரை வாகனத்தில் வீதி உலா

Published On 2022-10-06 06:38 GMT   |   Update On 2022-10-06 06:38 GMT
  • மூலவருக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது.
  • வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டிருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விஜயதசமியை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டது.தொடர்ந்து மூலவருக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் மதியம் சுவாமி அலைவாயுகந்த பெருமான் கேடய சப்பரத்தில் எழுந்தருளி சன்னதி தெரு வழியாக சிவன் கோவில் சென்றடைந்தார். அங்கிருந்து மதியம் 3 மணியளவில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி உள்மாட வீதி வழியாக பாளையங்கோட்டை சாலையில் உள்ள வேட்டை வெளி மண்டபத்திற்கு சென்றடைந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டிருந்து சாமி தரிசனம் செய்தனர்.

வேட்டைவெளிமண்டபத்தில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வெள்ளிக்குதிரை வாகனத்தில் அமர்ந்தவாறு அம்பெய்தும் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. பின்னர் அங்கிருந்து சுவாமி ரதவீதி சுற்றி மீண்டும் சன்னதி தெருவழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் திரண்டிருந்து சுவாமியை வழிபட்டனர். பின்னர் சுவாமி கோவிலை சென்றடைந்தார்.

Tags:    

Similar News