வழிபாடு

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் புஷ்பாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

Published On 2022-08-16 04:07 GMT   |   Update On 2022-08-16 04:07 GMT
  • குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில்.
  • கோவிலில் அனைத்து தெய்வங்களுக்கும் புஷ்பாபிஷேக விழா நடந்தது.

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி திங்கட்கிழமை அனைத்து தெய்வங்களுக்கும் புஷ்பாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான புஷ்பாபிஷேக விழா நேற்று நடந்தது.

மாலை 6.30 மணிக்கு நித்திய காரிய பூஜைகள் முடிந்த பின்பு தட்சிணா மூர்த்தி, கொன்றையடி, தாணுமாலய சாமி சன்னதி, திருவேங்கட விண்ணவரம் பெருமாள், நவகிரக மண்டபம், கைலாசநாதர், சாஸ்தா, ராமர் சன்னதி மற்றும் 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் உட்பட அனைத்து தெய்வங்களுக்கும் புஷ்பாபிஷேக விழா நடந்தது.

இதில் நாகர்கோவில் மாநகராட்சி ேமயர் மகேஷ், சுசீந்திரம் பேரூராட்சி தலைவி அனுசுயா மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணைஆணையர் ஞானசேகர் தலைமையில் கண்காணிப்பாளர் ஆனந்த், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்திருந்தனர்.

Tags:    

Similar News