வழிபாடு
வீரகாளியம்மன் முனீஸ்வரர் கோவில் வைகாசி திருவிழா

வீரகாளியம்மன் முனீஸ்வரர் கோவில் வைகாசி திருவிழா

Published On 2022-05-25 05:22 GMT   |   Update On 2022-05-25 05:22 GMT
கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி காவிரி படித்துறையிலிருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் பால்குடம் கரகம், எடுத்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர்.
கும்பகோணம் பழைய அரண்மனை தெருவில் மகா காளியம்மன் முனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி காவிரி படித்துறையிலிருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் பால்குடம் கரகம், எடுத்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர்.

தொடர்ந்து காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் காளிகா பரமேஸ்வரி சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று (புதன்கிழமை) பவளக்காளி திருநடன உற்சவம் நடக்கிறது.

நாளை மறுநாள் வீரகாளியம்மன் முனீஸ்வரர் ரதத்தில் வீதிஉலாவும், 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) விடையாற்றி உற்சவம், கஞ்சி வார்த்தல், சந்தனகாப்பு அலங்காரத்துடன் விழா முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News