வழிபாடு
14-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த தொண்டரீஸ்வரர் கோவிலில் பாலாலயம்

14-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த தொண்டரீஸ்வரர் கோவிலில் பாலாலயம்

Published On 2022-01-21 04:58 GMT   |   Update On 2022-01-21 04:58 GMT
14-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த தொண்டரீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகளை மேற்கொள்ள பாலாலயம் நடந்தது.
திருவண்ணாமலை கிருஷ்ணன் தெருவில் 14-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த சொர்ணாம்பிகை சமேத தொண்டரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. கோவிலில் 2003-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகளை மேற்கொள்ள நேற்று பாலாலயம் நடந்தது.

அதையொட்டி நேற்று காலை கோவில் நடை திறக்கப்பட்டு சொர்ணாம்பிகை சமேத தொண்டரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து யாக பூஜைகளில் பூர்ணாஹுதியும் நடந்தது. அத்தி மரப்பலகையில் தெய்வ சக்தியை ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அத்திமரப் பலகைக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து இக்கோவிலில் திருப்பணிக்கான பூர்வாங்க பணிகள் நேற்று முதல் தொடங்கியது.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன், திருவண்ணாமலை உதவி ஆணையர்கள் ஜோதிலட்சுமி, பரமேஸ்வரி, ஆய்வாளர்கள் முத்துசாமி, நடராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News