பரமத்திவேலூர் தாலுகா கு.அய்யம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் கம்பம் நடும் நிகழ்ச்சியும், அம்மனுக்கு சிறப்பு பூஜை, வடிசோறு நிகழ்ச்சி நடந்தது.
இதையடுத்து கோவில் வளாகத்தில் பொங்கல் மாவிளக்கு நிகழ்ச்சியும், இரவு வாணவேடிக்கையும் நடைபெற்றது. நேற்று காலை கிடா வெட்டுதல், மதியம் அம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வருதல், மஞ்சள் நீராடல் நடந்தன. விழாவிற்கான ஏற்பாடுகளை கு.அய்யம்பாளையம் பகவதியம்மன் கோவில் விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.