ஆன்மிகம்
குத்தாலம் அருகேபொன்னம்மா காளியம்மன் கோவில் குடமுழுக்கு

குத்தாலம் அருகேபொன்னம்மா காளியம்மன் கோவில் குடமுழுக்கு

Published On 2021-10-28 07:54 GMT   |   Update On 2021-10-28 07:54 GMT
குத்தாலம்பழைமை வாய்ந்த பொன்னம்மா காளியம்மன் கோவிலில் கிராம மக்களின் முயற்சியால் 70 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தேரழுந்தூர் கீழையூர் கிராமத்தில் பழைமை வாய்ந்த பொன்னம்மா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கிராம மக்களின் முயற்சியால் 70 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடைபெற்றது.

விழா கடந்த 25-ந் தேதி விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மூன்று கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று பூர்ணாகுதி செய்யப்பட்டது. குடமுழுக்கு தினமான நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை செய்யப்பட்டு, மகா பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

 தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை சுற்றி வந்து விமானத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத மேளதாளங்கள் வாசிக்க குடமுழுக்கு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு குடமுழுக்கை கண்டு தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News