ஆன்மிகம்
ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபுவில் வெங்கடேஸ்வரா சிலை பிரதிஷ்டை

ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபுவில் வெங்கடேஸ்வரா சிலை பிரதிஷ்டை

Published On 2021-10-27 06:36 GMT   |   Update On 2021-10-27 06:36 GMT
ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபுவில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பாக வெங்கடேஸ்வரா கோவில் புதிதாக கட்டப்பட உள்ளது. அங்கு வெங்கடேஸ்வரா சாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபுவில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பாக வெங்கடேஸ்வரா கோவில் புதிதாக கட்டப்பட உள்ளது. அங்கு வெங்கடேஸ்வரா சாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, மவுண்ட் அபு வெங்கடேஸ்வரா கோவில் அறக்கட்டளை தலைவர் உத்தம்பிரகாஷ் அகர்வால் ஆகியோர் பங்கேற்றனர்.

இதையடுத்து குஜராத் மாநிலம் அம்பாஜியில் உள்ள ‘அம்பா’ கோவிலில் அறங்காவலர் குழுத் தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி சாமி தரிசனம் செய்தார்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News