ஆன்மிகம்
கொண்டரசம்பாளையத்தில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கொண்டரசம்பாளையத்தில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2021-10-26 03:56 GMT   |   Update On 2021-10-26 03:56 GMT
கொண்டரசம்பாளையத்தில் காளியம்மன் கோவிலில் 4-ம் கால யாக பூஜையுடன், கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
கந்தம்பாளையம் அருகே உள்ள கொண்டரசம்பாளையத்தில் பழமையான காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து மகா கணபதி, காளியம்மன், கருப்பண்ண சாமிகளுக்கு கோபுர கலசம் அமைத்து கும்பாபிஷேகம் கடந்த 21-ந் தேதி கிராமசாந்தி பூஜையுடன் தொடங்கியது.

தொடர்ந்து 3 நாட்களாக விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், கோபுரத்திற்கு தானியம் நிரப்புதல் மற்றும் காவிரிக்கு சென்று புனித தீர்த்தம் எடுத்து வந்து கோபுர கலசம் வைத்தல், பிரதிஷ்டை செய்தல், மலர் அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சி நடந்தது.

இதையடுத்து 4-ம் கால யாக பூஜையுடன், கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கொண்டரசம்பாளையம், கல்லாங்காடு புதூர், வேட்டுவம்பாளையம், சித்தம்பூண்டி, மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News