ஆன்மிகம்
சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில்

சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

Published On 2021-10-19 08:22 GMT   |   Update On 2021-10-19 08:22 GMT
சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் நாளை (புதன்கிழமை) காலை 6 மணியில் இருந்து காலை 7 மணிவரை அர்ச்சனை, ஹோமம், காலை 11 மணியளவில் மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் நடக்கிறது.
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் 20-ந்தேதி நடக்கிறது. அதையொட்டி இன்று நேற்று காலை 9 மணியளவில் ஆச்சார்யா ருத்விக் வாரணம், அகல்மஷ ஹோமம், மாலை 6.30 மணியளவில் அங்குரார்ப்பணம் நடந்தது.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் யாக சாலையில் வைதீக காரிய கர்மங்களும், மாலை 6 மணியளவில் சிறப்பு ஹோமம், அஷ்டபந்தனம் சாத்துதல், மகா சாந்தி ஹோமம், பூர்ணாஹுதி, அர்ச்சனை, மகா சாந்தி அபிஷேகம் நடந்தது.

நாளை (புதன்கிழமை) காலை 6 மணியில் இருந்து காலை 7 மணிவரை அர்ச்சனை, ஹோமம், காலை 11 மணியளவில் மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் நடக்கிறது.

மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News