ஆன்மிகம்
ரத்தினகிரி பாலமுருகன் கோவில்

ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் 36 அடி உயரத்தில் உருவாகும் மரத்தேர்

Update: 2021-09-04 08:17 GMT
ரத்தினகிரி கோவிலில் தங்கத்தேர் உள்ளது. மேலும் பிரம்மோற்சவ விழாவிற்கு ரூ.60 லட்சம் செலவில் மரத்தேர் செய்யப்பட்டு வருகிறது.
ஆற்காடு அருகே உள்ள ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட திருவிழாக்கள் நடைபெறும்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

ரத்தினகிரி கோவிலில் தங்கத்தேர் உள்ளது. பக்தர்கள் தங்கத்தேர் இழுத்து நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர். மேலும் கோவில் மலை அடிவாரத்தில் அறுகோண வடிவில் தெப்பக்குளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இது ஒருபுறமிருக்க ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் பிரம்மோற்சவ விழாவிற்கு ரூ.60 லட்சம் செலவில் மரத் தேர் செய்யப்பட்டு வருகிறது.

இந்த தேர் 36 அடி உயரத்தில் உருவாக்கப்படுகிறது. 90 சதவீதத்திற்கு மேல் பணிகள் நிறைவடைந்துவிட்டன.தேர் முழுவதும் பல்வேறு சிலைகள் அலங்கார வேலைப்பாடு களுடன் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

இதன் முக்கிய பகுதியான அலங்கார தூண் பந்தல் அமைக்கும் வேலையை பாலமுருகனடிமை சாமிகள் நேற்று தொடங்கி வைத்தார்.

36 அடி உயரத்தில் உருவாகும் இந்த மரத் தேரில் பணிகள் 2 மாதத்தில் நிறைவு பெறும். அதற்கு அடுத்தபடியாக வெள்ளோட்டம் நடைபெற்று தேரோட்டம் நடைபெறும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News