ஆன்மிகம்
மண்டலாபிஷேக விழா

பாரைப்பட்டி சித்தி விநாயகர், பேசும் கன்னிமார் கோவில்களில் மண்டலாபிஷேக விழா

Published On 2021-07-14 05:35 GMT   |   Update On 2021-07-14 05:35 GMT
மதுரை காஞ்சரம்பேட்டையை அடுத்த பாரைப்பட்டியில் உள்ள சித்தி விநாயகர், பேசும் கன்னிமார் கோவில்களின் கும்பாபிஷேக விழா நடைபெற்றதை தொடர்ந்து நேற்று 48-வது நாள் மண்டலாபிஷேக விழா நடந்தது.
மதுரை காஞ்சரம்பேட்டையை அடுத்த பாரைப்பட்டியில் உள்ள சித்தி விநாயகர், பேசும் கன்னிமார் கோவில்களின் கும்பாபிஷேக விழா நடைபெற்றதை தொடர்ந்து நேற்று 48-வது நாள் மண்டலாபிஷேக விழா நடந்தது.

இதையொட்டி விநாயகர் கோவில் முன்பு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க யாக சாலையில் பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பால், தீர்த்தம், இளநீர், சந்தனம், விபூதி போன்ற 5 அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். பின்னர் பேசும் கன்னிமார் கோவிலில் பால், சந்தனம், உள்ளிட்ட 5 வகையான அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தன.

சிறப்பு அலங்காரத்தில் கன்னிமார் காட்சி தந்தார். அரசு வழிகாட்டுதலின்படி பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக வானத்தில் கருடன்கள் வட்டமிட்டன. அதை பார்த்து பக்தர்கள் பரவசத்துடன் வணங்கினர். விழா ஏற்பாடுகளை பாரைப்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News