ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் கோவில்

திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற ஏற்பாடு

Published On 2021-07-05 07:20 GMT   |   Update On 2021-07-05 07:20 GMT
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் வரிசையாக நின்று ஒருவருக்கு பின் ஒருவராக நின்று சமுக இடைவெளியை பின்பற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வால் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது. இதனையொட்டி கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி உத்தரவின் பேரில் அலுவலக சூப்பிரண்டு கர்ணன், உள்துறை சூப்பிரண்டுஅங்கயற்கன்னி, கோட்ட பொறியாளர் சிவமுருகானந்தம், துணை கமிஷனரின் நேர்முக உதவியாளர் மணிமாறன், பேஷ்கார் புகழேந்தி ஆகியோர் மேற்பார்வையில் கோவிலுக்குள் தரை பகுதியில் பெயிண்டினால் வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

சாமி தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் இந்த வட்டத்தில் வரிசையாக நின்று ஒருவருக்கு பின் ஒருவராக நின்று சமுக இடைவெளியை பின்பற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தடுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இது தவிர கோவில் வாசல் முன்பு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
Tags:    

Similar News