ஆன்மிகம்
திருநள்ளாறு சுரக்குடிலட்சுமி நாராயணபெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

திருநள்ளாறு சுரக்குடிலட்சுமி நாராயணபெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2021-06-29 05:05 GMT   |   Update On 2021-06-29 05:05 GMT
திருநள்ளாறு சுரக்குடி கிராமத்தில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகத்துக்கான முதல் கால யாக பூஜை கடந்த 26-ந்தேதி மாலை தொடங்கியது
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சுரக்குடி கிராமத்தில் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. புதுச்சேரி இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட இந்த கோவிலுக்கு, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து ரூ.45 லட்சம் செலவில் திருப்பணிகள் நடந்தன.

இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகத்துக்கான முதல் கால யாக பூஜை கடந்த 26-ந்தேதி மாலை தொடங்கியது. நேற்று காலை 4-ம் கால யாக பூஜைகள் நிறைவு பெற்றது. தொடர்ந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்றது.

பின்னர் மகா கும்பாபிஷேகம் நடந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருநள்ளாறு தொகுதி எம்.எல்.ஏ. பி.ஆர்.சிவா மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News