ஆன்மிகம்
நாதன்கோவில் ஜெகநாத பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா

நாதன்கோவில் ஜெகநாத பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா

Published On 2021-05-26 08:54 GMT   |   Update On 2021-05-26 08:54 GMT
கும்பகோணம் அருகே நாதன்கோவிலில் உள்ள ஜெகநாதபெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கும்பகோணம் அருகே நாதன்கோவிலில் உள்ள ஜெகநாதபெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடப்பது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, பெருமாள் தாயாரோடு சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினர். பின்னர் மங்கள வாத்தியம் முழங்க கருட கொடியேற்றம் நடைபெற்றது.

30-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு திருக்கல்யாணமும், 2-ந் தேதி(புதன்கிழமை) காலை 8 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும், 3-ந் தேதி(வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு புஷ்ப யாக நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஜெகநாதபெருமாள் கைங்கர்ய சபை மற்றும் கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்து உள்ளனர்.
Tags:    

Similar News