ஆன்மிகம்
வல்லண்டராமம் புஷ்ப ரத ஏரித் திருவிழா

வல்லண்டராமம் புஷ்ப ரத ஏரித் திருவிழா

Published On 2021-05-13 06:44 GMT   |   Update On 2021-05-13 06:44 GMT
உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் கோடை காலத்தில் உணவு விஷயத்தில் சில கட்டுப்பாடுகளை பின்பற்றுவது அவசியமானது.
வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் அணைக்கட்டு அடுத்த வல்லண்டராமம் புஷ்ப ரத ஏரித்திருவிழாவும் ஒன்று. இந்தத் திருவிழா
சித்திரை மாதம் கடைசி புதன்கிழமைகளில் விமரிசையாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா நோய்த் தொற்றால் திருவிழா நடைபெறவில்லை. அதேபோல் இந்த ஆண்டும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக திருவிழாவுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வேலங்காடு மற்றும் வல்லண்டராமத்தில் உள்ள பொற்கொடியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வருவதை தடுக்க 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்றுஅதி காலை வேலங்காடு ஏரியில் உள்ள மூலவர் பொற்கொடி அம்மனுக்கு அரசு அனுமதியுடன் சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டு மீண்டும் கோவில் பூட்டப்பட்டது.

அதிகாலை முதலே பக்தர்கள் ஏரியில் உள்ள அம்மனை தரிசிக்க இரண்டு சக்கர வாகனத்தில் வந்த வண்ணம் இருந்தனர். ஆனால் யாரும் கோயிலுக்கு உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் நேர்த்திக்கடனை செய்ய முடியாமல் பக்தர்கள் வேதனை அடைந்தனர். அதேசமயம் ஏரிக்கு வெளியே தேர் நிறுத்தப்படும் இடங்களில் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செய்து சாமி கும்பிட்டுவிட்டு சென்றனர்.
Tags:    

Similar News