ஆன்மிகம்
தீர்த்தபாலீஸ்வரர் கோவில்

தீர்த்தபாலீஸ்வரர் கோவிலின் சிறப்பு

Published On 2021-05-08 07:33 GMT   |   Update On 2021-05-08 07:33 GMT
முன் காலத்தில் இந்தக் கோவிலில் 64 வகையான தீர்த்தக் குளங்கள் இருந்திருக்கின்றன. சப்த சிவாலய தெய்வங்களும் கடல் நீராடுவதற்கு முன்பாக, இந்த தீர்த்தங்களில்தான் நீராடுவார்களாம்.
மயிலாப்பூரில் இருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில், நடேசன் சாலை உள்ளது. இங்குதான், சப்த சிவாலயங்களில் 2-வதாக வழிபட வேண்டிய தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது.

மாசி மாதத்தில் இங்கு நடைபெறும் தீர்த்த நீராட்ட விழாவின்போது, சப்த சிவாலயங்களின் தெய்வங்களும் கடலில் இருந்து எழுந்தருள்வார்கள். அவர்களில் இத்தல இறைவனுக்குத்தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறும்.

எனவேதான் இந்த இறைவனுக்கு ‘தீர்த்தபாலீஸ்வரர்’ என்று பெயர். முன் காலத்தில் இந்தக் கோவிலில் 64 வகையான தீர்த்தக் குளங்கள் இருந்திருக்கின்றன. சப்த சிவாலய தெய்வங்களும் கடல் நீராடுவதற்கு முன்பாக, இந்த தீர்த்தங்களில்தான் நீராடுவார்களாம்.

தெய்வீக சக்தி வாய்ந்த தீர்த்தங்களாக அவை கருதப்பட்டு வந்திருக்கின்றன. இப்போது அவை இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. இந்தக் கோவிலில் அகத்திய முனிவரும், அத்ரி மகரிஷியும் வழிபாடு செய்திருக்கிறார்கள்.
Tags:    

Similar News