ஆன்மிகம்
திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி

திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி

Published On 2021-04-15 03:35 GMT   |   Update On 2021-04-15 03:35 GMT
திருவிடைமருதூரில் உள்ள பிரசித்திப்பெற்ற மகாலிங்க சுவாமி கோவிலில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மகாலிங்கசுவாமி சன்னதி, 27 நட்சத்திர சன்னதி உள்ளிட்ட சன்னதிகளில் வழிபாடு செய்தனர்.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் உள்ள பிரசித்திப்பெற்ற மகாலிங்க சுவாமி கோவிலில் தமிழ்ப்புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மகாலிங்கசுவாமி சன்னதி, 27 நட்சத்திர சன்னதி உள்ளிட்ட சன்னதிகளில் வழிபாடு செய்தனர்.

திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை ஸ்தானீகம் அம்பலவாண தேசிக சுவாமிகள் முன்னிலையில் உற்சவர் சோமாஸ்கந்தர் வீதி உலா நடந்தது. இதையடுத்து கோவிலில் உள்ள காருண்யாமிர்த தீர்த்தத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் சிறப்பு அலங்காரத்துடன் பிரகத் சுந்தர குஜாம்பாள் உடனாகிய மகாலிங்க சுவாமி படித்துறை வினாயகர் சன்னதி முன்பு எழுந்தருளினார்.

அப்போது திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை ஸ்தானிகம் முன்னிலையில் தமிழ்பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் முக கவசம் அணிந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News