ஆன்மிகம்
திருவானைக்காவல் அரசமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திருவானைக்காவல் அரசமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2021-02-23 05:56 GMT   |   Update On 2021-02-23 05:56 GMT
திருவானைக்காவல் வடக்கு 5-ம் பிரகாரம் பகுதியில் அமைந்துள்ள அரச முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவானைக்காவல் வடக்கு 5-ம் பிரகாரம் பகுதியில் அமைந்துள்ள அரச முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக கடந்த 19-ந் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. மாலை வாஸ்து ஹோமம், வாஸ்து சாந்தி நடைபெற்றது. 20-ந் தேதி காலை காவிரி ஆற்றில் இருந்து திருமஞ்சனம் எடுத்து வரப்பட்டது.

பின்னர், அன்று மாலை முதல்கால யாகசாலை பூஜை, வேதபாராயணம், பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்றன. 21-ந் தேதி காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜை, வேதபாராயணம், பூர்ணாகுதி நடைபெற்றன. நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை, விசேஷ திரவிய ஹோமம், நாடிசந்தனம், பூர்ணாகுதி, யாத்ராதானம், கடம் புறப்பாடு ஆகியவை நடைபெற்றன.

பின்னர் காலை 9.30 மணிக்கு மீன லக்னத்தில் அரசமுத்து மாரியம்மன் சன்னதி கோபுரம் மற்றும் உபசன்னதிகளான செல்வவிநாயகர், ஆஞ்சநேயர் சன்னதிகளில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் ஸ்தபதி தட்சிணாமூர்த்தி, செந்தில்நாதன் சிவாச்சாரியார் உள்பட பலர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News