ஆன்மிகம்
ராஜகணபதி கோவிலில் பாலாபிஷேகம்

சதுர்த்தி நிறைவு நாளையொட்டி சேலம் ராஜகணபதி கோவிலில் பாலாபிஷேகம்

Published On 2020-09-03 04:25 GMT   |   Update On 2020-09-03 04:25 GMT
இந்தநிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் ராஜகணபதி கோவில் திறக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று ராஜகணபதியை தரிசனம் செய்து செல்கிறார்கள்.
சேலம் கடைவீதியில் பிரசித்தி பெற்ற ராஜ கணபதி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். ஆனால் இந்தாண்டு கொரோனா தொற்று காரணத்தால் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவில்லை. இந்தநிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் நேற்று முன்தினம் முதல் ராஜகணபதி கோவில் திறக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று ராஜகணபதியை தரிசனம் செய்து செல்கிறார்கள்.

இதனிடையே, விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு நாளையொட்டி நேற்று காலை ராஜகணபதிக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு சிறப்பு யாகம் வளர்த்து விநாயகருக்கு சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் முக கவசம் அணிந்து வந்த பக்தர்கள் மட்டும் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதேபோல பக்தர்களுக்கு கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினியும் வழங்கப்பட்டது. 5 மாதங்களுக்கு பிறகு ராஜகணபதி கோவில் திறக்கப்பட்டு பூஜைகள் நடப்பதை அறிந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்து விட்டு செல்வதை காணமுடிகிறது.
Tags:    

Similar News