ஆன்மிகம்
ஆடிப்பூரத்தையொட்டி அம்மன் கோவில்களில் வளைகாப்பு நிகழ்ச்சி

ஆடிப்பூரத்தையொட்டி அம்மன் கோவில்களில் வளைகாப்பு நிகழ்ச்சி

Published On 2020-07-25 03:43 GMT   |   Update On 2020-07-25 03:43 GMT
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக அம்மனுக்கு விரதம் இருந்த பெண்கள், வீடுகளிலேயே வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி, வழிபட்டார்கள்.
ஆடி மாதத்தில் வரும் பூரம் அம்மனுக்கு உகந்த நாள் ஆகும். ஆடிப்பூரம் விரதம் இருந்து அம்மனை தரிசித்தால் திருமண வரம் கிடைக்கும். வளை காப்புக்கு வளையல்கள் வாங்கி கொடுத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இந்துக்களின் ஐதீகம்.

ஆடிப்பூரம் நேற்று வந்த நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பெரும்பாலான கோவில்கள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் அம்மனுக்கு விரதம் இருந்த பெண்கள், வீடுகளிலேயே வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி, வழிபட்டார்கள். இதுதவிர ஒரு சில இடங்களில் திறந்திருந்த அம்மன் கோவில்களில் பெண்கள் வளைகாப்பு நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.

அம்மனிடம், தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற மனம் உருக பிரார்த்தனை செய்தனர். மேலும் தங்களுடைய நேர்த்திக்கடன்களையும் செலுத்தினார்கள். வழக்கமாக ஆடிப்பூரம் நிகழ்ச்சி அம்மன் கோவில்களில் களை கட்டுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக களை இழந்தது.
Tags:    

Similar News