ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

திருப்பரங்குன்றம் கோவிலில் நாளை ஆடிப்பூர திருவிழா

Published On 2020-07-23 06:59 GMT   |   Update On 2020-07-23 06:59 GMT
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நாளை பக்தர்கள் அனுமதியின்றி ஊரடங்கின் விதியை பின்பற்றி ஆடிப்பூர திருவிழா கோவிலுக்குள் உள் திருவிழாவாக நடக்கிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆடிப்பூர திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டு நாளை (வெள்ளிக்கிழமை) ஆடிப்பூர திருவிழா நடைபெறும் நாளாகும். இதேபோல் வருகிற ஆகஸ்டு 12-ந்தேதி ஆடிக்கார்த்திகை நாளாகும். இந்த திருவிழாக்கள் கோவிலுக்குள் உள் திருவிழாவாக நடத்தப்படுமா என்று பக்தர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையரும், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தக்காருமான செல்லத்துரை கோவிலுக்குள் உள் திருவிழாவாக ஆடிப்பூர திருவிழாவை நடத்துமாறு கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து நாளை பக்தர்கள் அனுமதியின்றி ஊரடங்கின் விதியை பின்பற்றி ஆடிப்பூர திருவிழா கோவிலுக்குள் உள் திருவிழாவாக நடக்கிறது.
Tags:    

Similar News