ஆன்மிகம்
திருவக்கரை வக்ரகாளியம்மன்

திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் மகா தீபம் ரத்து

Published On 2020-06-05 07:26 GMT   |   Update On 2020-06-05 07:26 GMT
வைகாசி மாதத்திற்கான பவுர்ணமி இன்று(வெள்ளிக்கிழமை) வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இக்கோவிலில் இன்று நடைபெற வேண்டிய மகா தீபம் ரத்து செய்யப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள திருவக்கரையில் பிரசித்தி பெற்ற வக்ர காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி அன்று மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி வைகாசி மாதத்திற்கான பவுர்ணமி இன்று(வெள்ளிக்கிழமை) வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இக்கோவிலில் இன்று நடைபெற வேண்டிய மகா தீபம் ரத்து செய்யப்படுகிறது.

இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டும் பக்தர்களின் நலன் கருதியும் இன்று கோவிலில் நடைபெற இருந்த பவுர்ணமி ஜோதி தரிசனம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த தினத்தில் பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். மேலும் கோவிலில் வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News