search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவக்கரை வக்ரகாளியம்மன்"

    • ஜாதகத்தில் சனி வக்கிரமாக உள்ளவர்கள் இங்கே வந்து பூஜித்துச் செல்லலாம்.
    • மழலைபாக்கியம் வேண்டுபவர்கள் இக்கோயிலில் வந்து நெய்தீபம் ஏற்றினால் பலன் நிச்சயம்.

    வக்கிர தோஷ நிவர்த்தி ஸ்தலமாக விளங்கும் இக்கோவிலில் மூன்று கால பூஜைகளுடன் காலை6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். வக்ரசாந்தி திருத்தலம் எனப்படும் இத்திருக்கோயிலில் உள்ள வக்ரகாளியம்மனை தரிசனம் செய்வதினால் எவ்வகை வக்கிரதோஷம் இருந்தாலும் நிவர்த்தியும், திருமணபாக்கியம், மழலைபாக்கியம் வேண்டுபவர்கள் இக்கோயிலில் வந்து நெய்தீபம் ஏற்றுதல், தொட்டில் கட்டுதல் போன்றவற்றை செய்து பயன் பெறுகிறார்கள். தொடர்ந்து மூன்று பவுர்ணமிகளில் இரவில் ஜோதிதரிசனம் காண நினைத்த காரியங்கள் முடிவடைகின்றன.

    மனநிம்மதி வேண்டி, கிரக தோஷங்கள் நீங்க, காரியத்தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாக, பூர்வஜென்ம பாவங்கள் விலக, (வக்கிர தோஷ ) புத்திர தோஷங்கள் விலக, காரியத் தடைகள் நீங்க இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமானை பிரார்த்திக்கிறார்கள்.

    வக்ரகாளியம்மன், சந்திரமவுலீஸ்வரர், சனி பகவான் சன்னதிகள் வெவ்வெறு திசைகளை நோக்கியவாறு வக்கிரமாக உள்ளன. வக்கிர கிரகங்களால் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து வக்கிர காளி, வக்கிர லிங்கம், வக்கிர சனி பகவான் முதலியோரை தரிசித்து துன்பங்களும் நீங்கப் பெற்று வாழ்க்கையில் பயன் அடைவர்.

    நவக்கிரகங்களில் சனி, குரு ஆகிய கோள்கள் தாம் சஞ்சரித்த ராசிகளிலேயே பின் நோக்கி சில சமயங்களில் சில நாட்களோ மாதங்களோ சஞ்சரிப்பதுண்டு. இதை 'வக்கிரகதி' என்று சொல்லுவார்கள்.

    சனியின் வக்கிரத்தினால் துன்பப்படுகிறவர்கள் திருவக்கரை வக்கிரகாளியம்மன் தலத்துக்கு வந்து சனிக்கோளை வணங்கினால் துன்பம் நிச்சயம் குறையும், நீங்கும் என்று நம்புகிறார்கள். அப்படிப்பலன் அடைந்தவர்கள் பலர் என்றும் சொல்லுகிறார்கள்.

    ஜாதகத்தில் சனி வக்கிரமாக உள்ளவர்கள் இங்கே வந்து பூஜித்துச் செல்லலாம். சனி பகவானின் வாகனமான காகம் தெற்கு நோக்கி இருப்பது இங்கே விசேஷம்.

    • திண்டிவனம் அருகே திருவக்கரையில் அமைந்துள்ளது வக்ர காளியம்மன் கோவில்.
    • வக்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    திண்டிவனம் அருகே திருவக்கரையில் பிரசித்தி பெற்ற வக்ர காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி அன்று நள்ளிரவு மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி ஆனி மாத பவுர்ணமியான நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கோவிலின் மேல் பிரகாரத்தில் அமைந்துள்ள பீடத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் ஓம் காளி, வக்ர காளி, வக்ரகாளி ஜோதியை பார்த்தால் பாவம் தீரும் என கோஷமிட்டனர். முன்னதாக வக்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையர் சிவாகரன், செயல் அலுவலர் சிவக்குமார், ஆய்வாளர் உமாமகேஸ்வரி, சிவாச்சாரியார் குருக்கள் சேகர், மேலாளர் ரவி ஆகியோர் செய்திருந்தனர்.

    மகா தீபம் ஏற்றப்பட்டதையொட்டி விழுப்புரம், திண்டிவனம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து திருவக்கரைக்கு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    ×