search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thiruvakkarai vakrakaliamman"

    • ஜாதகத்தில் சனி வக்கிரமாக உள்ளவர்கள் இங்கே வந்து பூஜித்துச் செல்லலாம்.
    • மழலைபாக்கியம் வேண்டுபவர்கள் இக்கோயிலில் வந்து நெய்தீபம் ஏற்றினால் பலன் நிச்சயம்.

    வக்கிர தோஷ நிவர்த்தி ஸ்தலமாக விளங்கும் இக்கோவிலில் மூன்று கால பூஜைகளுடன் காலை6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். வக்ரசாந்தி திருத்தலம் எனப்படும் இத்திருக்கோயிலில் உள்ள வக்ரகாளியம்மனை தரிசனம் செய்வதினால் எவ்வகை வக்கிரதோஷம் இருந்தாலும் நிவர்த்தியும், திருமணபாக்கியம், மழலைபாக்கியம் வேண்டுபவர்கள் இக்கோயிலில் வந்து நெய்தீபம் ஏற்றுதல், தொட்டில் கட்டுதல் போன்றவற்றை செய்து பயன் பெறுகிறார்கள். தொடர்ந்து மூன்று பவுர்ணமிகளில் இரவில் ஜோதிதரிசனம் காண நினைத்த காரியங்கள் முடிவடைகின்றன.

    மனநிம்மதி வேண்டி, கிரக தோஷங்கள் நீங்க, காரியத்தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாக, பூர்வஜென்ம பாவங்கள் விலக, (வக்கிர தோஷ ) புத்திர தோஷங்கள் விலக, காரியத் தடைகள் நீங்க இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமானை பிரார்த்திக்கிறார்கள்.

    வக்ரகாளியம்மன், சந்திரமவுலீஸ்வரர், சனி பகவான் சன்னதிகள் வெவ்வெறு திசைகளை நோக்கியவாறு வக்கிரமாக உள்ளன. வக்கிர கிரகங்களால் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து வக்கிர காளி, வக்கிர லிங்கம், வக்கிர சனி பகவான் முதலியோரை தரிசித்து துன்பங்களும் நீங்கப் பெற்று வாழ்க்கையில் பயன் அடைவர்.

    நவக்கிரகங்களில் சனி, குரு ஆகிய கோள்கள் தாம் சஞ்சரித்த ராசிகளிலேயே பின் நோக்கி சில சமயங்களில் சில நாட்களோ மாதங்களோ சஞ்சரிப்பதுண்டு. இதை 'வக்கிரகதி' என்று சொல்லுவார்கள்.

    சனியின் வக்கிரத்தினால் துன்பப்படுகிறவர்கள் திருவக்கரை வக்கிரகாளியம்மன் தலத்துக்கு வந்து சனிக்கோளை வணங்கினால் துன்பம் நிச்சயம் குறையும், நீங்கும் என்று நம்புகிறார்கள். அப்படிப்பலன் அடைந்தவர்கள் பலர் என்றும் சொல்லுகிறார்கள்.

    ஜாதகத்தில் சனி வக்கிரமாக உள்ளவர்கள் இங்கே வந்து பூஜித்துச் செல்லலாம். சனி பகவானின் வாகனமான காகம் தெற்கு நோக்கி இருப்பது இங்கே விசேஷம்.

    • திண்டிவனம் அருகே திருவக்கரையில் அமைந்துள்ளது வக்ர காளியம்மன் கோவில்.
    • வக்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    திண்டிவனம் அருகே திருவக்கரையில் பிரசித்தி பெற்ற வக்ர காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி அன்று நள்ளிரவு மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி ஆனி மாத பவுர்ணமியான நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கோவிலின் மேல் பிரகாரத்தில் அமைந்துள்ள பீடத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் ஓம் காளி, வக்ர காளி, வக்ரகாளி ஜோதியை பார்த்தால் பாவம் தீரும் என கோஷமிட்டனர். முன்னதாக வக்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையர் சிவாகரன், செயல் அலுவலர் சிவக்குமார், ஆய்வாளர் உமாமகேஸ்வரி, சிவாச்சாரியார் குருக்கள் சேகர், மேலாளர் ரவி ஆகியோர் செய்திருந்தனர்.

    மகா தீபம் ஏற்றப்பட்டதையொட்டி விழுப்புரம், திண்டிவனம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து திருவக்கரைக்கு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    திருவக்கரை ஆலயத்தில் மூலஸ்தானத்து இறைவன் முகலிங்கமாகக் காட்சி அளிக்கின்றார். இது வேறு எங்கும் காண முடியாத அற்புதத் திருக்காட்சியாகும்.
    திருவக்கரை ஆலயத்தில் மூலஸ்தானத்து இறைவன் முகலிங்கமாகக் காட்சி அளிக்கின்றார். இது வேறு எங்கும் காண முடியாத அற்புதத் திருக்காட்சியாகும்.
    அந்தந்த தலப்பெருமைக்கு ஏற்ப ஒருமுக லிங்கம், இருமுக லிங்கம், மும்முக லிங்கம், நான்முக லிங்கம், ஐம்முக லிங்கம் அமைத்தல் வேண்டும் என்பது சாஸ்திர விதி. மேல் பாகம் ஈசான முகம், கிழக்கே தத்புருட முகம், தெற்கே அகோர முகம், வடக்கே வாம தேவ முகம், மேற்கே சந்தியோ சாத முகமும் அமையப் பெற்றது ஐந்து முக லிங்கம்.

    ஐந்து முகலிங்கம் கொண்ட சிவஸ்தலம் வடக்கில் நேபாளத்திலும், தெற்கில் ஆந்திராவில் உள்ள காளஸ்திரியிலம் உள்ளது. நான்கு முகம் கொண்ட லிங்கம் திருவண்ணாமலை வெளிப்பிரகார தெய்வமாகக் காணப்படுகிறது. மூன்று முகம் கொண்ட கருவறை லிங்கம் இந்தியாவில் இது ஒன்றே காணப்படுகிறது.
    கருவறையில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் சேர்ந்த ஒரு திருவடிவமாய், முகலிங்கமாய் இறைவன் காட்சி அளிக்கின்றார்.

    இங்கு கிழக்கே தட்புருட முகம், வடக்கே வாமதேவ முகமும், தெற்கே அகோர முகமும் அமையப் பெற்றுள்ளது. அதிகாலையில் தட்புருட முகத்தை மஞ்சள் பூசியும், உச்சி காலத்தில் வாமதேவ முகத்தை சந்தனம் சாத்தியும், மாலையில் அகோர முகத்தை குங்குமம் அணிவித்தும், பூஜை செய்து வணங்கினால் அகிலத்தையே காக்கின்ற அம்மையப்பரின் அருள் நமக்கு கிடைக்கும். இந்தச் சிவலிங்கத்தில் அகோர முகத்தில் பெயருக்கேற்றார் போல் வாயின் இரு ஓரத்திலும் இரு கோரைப்பற்கள் உள்ளன. இக்காட்சியை இறைவனுக்குப் பால் அபிஷேகம் செய்யும்போது மட்டும்தான் தெளிவாகக் காண முடியும்.

    கருவறையின் இருபுறமும் 10அடி உயரத்தில் இரு துவாரபாலகர்கள் தங்கள் கால்களைக் கதைகளின் மேல்தூக்கி வைத்துக் கொண்டு உள்ளனர். கருவறையின் வலப்புறத்தில் பதினாறு பட்டை லிங்கம் அமைக்கப்பெற்றுள்ளது. இடப்புறத்தில் வீரபத்திரர் காட்சி தருகிறார். கருவறையின் உள் சுற்றில் முதலில் இருப்பது சமயக் குரவர்கள் நால்வர் சிலை. அதையடுத்து விநாயகர், சுப்பிரமணியர் வள்ளி-தெய்வானையுடன் காணப்படு கிறார். பக்கத்தில் விஷ்ணு துர்க்கையும் பல்லவர் கால கணபதியும் உள்ளன.

    கருவறைக்கு வடதிசையில் வக்கிர காளியின் சிறிய வடிவம் ஒன்றும் காணப்படுகிறது. கருவறைக்கு தென்திசை யில் குண்டலினி மாமுனிவர் என்ற சித்தரின் ஜீவ சமாதி உள்ளது. இவர் ஜீவ சமாதி அடைந்ததும் லிங்கம் அமைக்கப்பெற்ற நிலையில் தனிக்கோவில் ஆகியது. இக்கோவிலை யடுத்து தென்புறம் நோக்கி வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகப் பெருமான் அமைந்துள்ளார்.

    காளி கோவிலின் உள்ளே சப்த மாதர்கள் உள் ளனர். அவர்கள் வராகி, இந்திராணி, கௌமாரி, வைஷ்ணவி, பிராமணி, துன் முகி, சாமுண்டி ஆகியோர் அமைக் கப்பட்டுள்ளனர். இவர்களில் சாமுண்டிக்குப் பதிலாக அன்னை ஆதிபராசக்தியே காளியாக உருவெடுத்துப் பக்தர்களுக்கு அருள்புரிகின்றார்.

    இந்த சப்த மாதர் கோவில் அமைப்பும் வக்கிரக் காளியும் பிற்பட்ட பல்லவர் காலத்ததாகவோ, முற்பட்ட சோழர் காலத்ததாகவோ இருக்கலாம் என்றும் செம்பியின் மாதேவியால் புதுப்பிக்கப்பட்ட இக்கோவில் சமீப காலத்தில் நிகழ்த்தப் பெற்ற ஒரு திருப்பணியால் இதன் பழைய சிற்பங்கள் சிதைவுற்று விட்டன என்றும், இக்கோவில் சிற்பங்கள் பிற்காலத் திருப்பணியாளர்களால் இடமாற்றம் பெற்றுள்ளன.

    தமிழ்நாட்டில் எத்தனையோ, பழமையான காளி கோவில்கள் இருந்தாலும அவற்றுள் திருவக்கரை வக்கிரகாளி அம்மன் ஆலயம் மிக, மிக வித்தியாசமானது. இந்த அம்மனுக்கு உகந்த கவசத்தை பார்க்கலாம்.
    ஓம் திருவக்கரை வாழும் செல்வியே போற்றி
    ஓம் வக்கிரகாளி அம்மையே போற்றி
    ஓம் நற்பவி மந்திர நாயகியே போற்றி
    ஓம் திருவேற்காடுதுறை காளி மாரி தாயே போற்றி
    ஓம் மாங்காட்டில் வாழும் காமாட்சி யன்னையே போன்றி
    ஓம் மூன்றாம் கட்டளையமர்ந்த மூகாம்பிகை தாயே போற்றி
    ஓம் பெரிய கருப்பூரில் ஆளும் சாமுண்டிக் காளியே போற்றி
    ஓம் நாட்டரசன் கோட்டை வாழும் கண்ணுடைய நாயகியே போற்றி
    ஓம் ராகுகால பூஜை ஏற்கும் துர்க்கையே போற்றி
    போற்றி போற்றி ஜெகத்ரஷியே போற்றி
    போற்றி போற்றி மகிஷாசுர மர்த்தினியே போற்றி
    போற்றி போற்றி நற்பவி மந்திர நாயகியே போற்றி
    போற்றி போற்றி வக்ர பத்ரகாளியே போற்றி
    சிம்ம வாகினியே சிரசைக் காக்க
    நெடுமால் சோதரி நெற்றியைக் காக்க
    கஜமுகன் தாயே கண்களைக் காக்க
    காளி மாதாவே காதினைக் காக்க
    கால ராத்ரீயே கரங்களைக் காக்க
    மகேஸ்வரியே மார்பினைக் காக்க
    ஈசுவரித் தாயே இதயத்தைக் காக்க
    வஜ்ரேஸ்வரியே வயிற்றினைக் காக்க
    முண்டமாலினியே முதுகைக் காக்க
    கோரரூபினியே குதத்தைக் காக்க
    துர்க்கா தேவியே தொடையினைக் காக்க
    கால கண்டிகையே காலினைக் காக்க
    காக்க காக்க காளியே வருவாய்
    கண்ணில் ஒளியைக் கண்ணமை தருவாள்
    நாவல் நிறத்தை நாரணி தருவாள்
    வாக்கினில் உண்மையை வக்கிரகாளி தருவாள்
    மனதில் திடத்தை மாகேந்தரி தருவாள்.

    திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோவிலில் 6 விதமான பரிகாரங்கள் மிகவும் பிரசித்தி பெற்றது. அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    திருவக்கரை ஆலயத்தில் மூலஸ்தானத்து இறைவன் முகலிங்கமாகக் காட்சி அளிக்கின்றார். இந்த ஆலயத்தில் உள்ள வக்கிர லிங்கம் எதிரே உள்ள மணலில் புதைந்து காணப்படும் நந்திக்கு மஞ்சள் குங்குமம் பூமி வழிபாடு செய்தால், அவர் மூலம் சிவன் அருளை பெற முடியும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது. எனவே சிவனிடம் செய்ய வேண்டிய பரிகாரங்களை இந்த நந்தி மூலம் பக்தர்கள் செய்கிறார்கள்.

    பவுர்ணமி தோறும் தீப கொப்பரையில் தீபம் ஏற்றுகிறார்கள். 3 பவுர்ணமி இந்த தீபத்தை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

    குழந்தை பேறு வேண்டி காளியம்மன் சன்னதி பின்புறம் தொட்டில் கட்டும் வழக்கம் உள்ளது.

    திருமணத்திற்காக பெண்கள் இந்த மரத்தில் மஞ்சள் கயிறு கட்டும் வழக்கம் உள்ளது.

    கடன் பிரச்சினை, வழக்குகள், மாமியார் கொடுமை ஆகியவை நீங்குவதற்கு பூட்டு போடும் பரிகாரம் செய்கின்றனர்.

    நாகதோஷம் நீங்குவதற்காக இத்தலத்தில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
    திருவக்கரை மிகப் பழமையானது. பெருமையும், புனிதமும் நிறைந்தது. திருவக்கரை வக்கிரகாளியை வழிபட்டால் எல்லா வக்கிரங்களும் தீரும்.
    1. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சேக்கிழார், அருணகிரிநாதர், ராமலிங்க சுவாமிகள் ஆகிய அருளாளர்கள் திருவக்கரை அருள்மிகு சந்திரமவுலீசுவரரை பாடி உள்ளனர்.

    2. திருவக்கரை கோவிலுக்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் புதுச்சேரியில் இருந்தும், திண்டிவனத்தில் இருந்தும் சிறப்பு பஸ்கள் செல்கின்றன.

    3. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் குறைந்தது ஒரு லட்சம் பக்தர்களாவது இங்கு கூடுகின்றனர்.

    4. ஒவ்வொரு பவுணர்மி அன்றும் ஏராளமான பக்தர்கள் கூடி நின்று தீபம் ஏற்றி வழிபடுவர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் தம்பதி சகிதமாக ஆலயத்திற்கு வந்து அம்மனை மனமுருகி வழிபட்டுச் செல்கிறார்கள்.

    5. தலப்புராணத்தில் வக்கிராசூரனுடைய தாத்தாவாக குண்டலினி முனிவர் குறிப்பிடப்படுகின்றார். இதன் வெளிப்பாடாக குண்டலினி முனிவர் அவரது பேரனான வக்கிராசூரன் ஆகியோர் சிற்பங்கள் தென் பிரகாரத்தில் காணப்படுகின்றன.

    6. சந்திரமவுலீஸ்வரர் ஆலயத்தில் பெருமாள் கோவிலில் பின்புறம் கிழக்கு நோக்கி சகஸ்ரலிங்கம் கோவில் அமைந்துள்ளது. ஒரே ஒரு சிறிய சிவலிங்கத்தில் ஆயிரத்தெட்டு லிங்கங்கள் அமைக்கப் பெற்றுள்ளது. இது அபூர்வ லிங்கம்.

    7. திருவக்கரை வக்கிர காளியை வழிபட்டால் எல்லா வக்கிரங்களும் தீரும். மனம் பக்குவப்படும்.

    8. திருவக்கரை மிகப் பழமையானது. பெருமையும், புனிதமும் நிறைந்தது.

    9. வராக ஆறு என அழைக்கப்படும் சங்கராபரணி ஆற்றின் வடகரையில் கோவில் அமைந்துள்ளது.

    10. திருமணமாகாதோர், பிள்ளைப்பேறு அற்றோர் இக்கோவிலில் உள்ள துர்க்கையம்மனை தரிசித்து, செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் ராகுகால நேரத்தில் அர்ச்சனை செய்தால் நல்ல பலன் உண்டு.

    11. நினைத்த காரியம் கைகூட வக்கிர காளியம்மனைத் தொடர்ந்து மூன்று பவுர்ணமி நாளில் தரிசிக்க வேண்டும்.

    12. மன நிம்மதி வேண்டி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் அருளும் அற்புத தெய்வமாக திருவக்கரை வக்கிர காளியம்மன் விளங்குகிறாள்.

    13. இத்திருக்கோவில் விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம் திருவக்கரை கிராமத்தில் அமைந்துள்ளது.

    14. இத்திருத்தலம் மூலவராக உள்ள சந்திரமவுலீஸ்வரரின் பெயரில் விளங்கினாலும் வக்கிர காளியம்மனே பிரசித்தி பெற்று விளங்குகிறார்.

    15. கருவறையில் பின்புறம் மேற்கு நோக்கி வரதராஜ பெருமாள் நின்ற கோலத்தில் தனித்து காட்சியளிக்கிறார்.

    16. இக்கோவிலில் உள்ள வக்கிரகாளியம்மன், சந்திரமவுலீஸ் வரர், சனி பகவான் சன்னதிகள் வெவ்வெறு திசைகளை நோக்கியவாறு வக்கிரமாக உள்ளன.

    17. வக்கிர கிரகங்களால் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து வக்கிர காளி, வக்கிர லிங்கம், வக்கிர சனி பகவான் முதலியோரை தரிசித்து வக்கிரமாக கட்டப்பட்டுள்ள இக்கோவிலை வலம் வந்தால் வக்கிர கிரகங்களின் தொல்லைகளும் துன்பங்களும் நீங்கப் பெற்று வாழ்க்கையில் பயன் அடைவர்.

    18. அமாவாசை, பவுர்ணமி விழாக்காலங்களில் வக்கிர காளியம்மனை சந்தன காப்பு அலங்காரத்துடன் காணும் காட்சி கண் கொள்ளாக் காட்சியாகும்.

    19. பவுர்ணமி தினத்தில் இரவு 12 மணிக்கும், அமாவாசையில் பகல் 12 மணிக்கும் இங்கு காட்டப்படும் ஜோதி தரிசனம் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    20. மாதாந்திர பவுர்ணமி, அமாவாசை விழா, சித்ரா பவுர்ணமி உற்சவம் ஆடிக்கிருத்திகை, கார்த்திகை தீப உற்சவம், தை பூசம் மற்றும் காணும் பொங்கல் உற்சவம், தமிழ் வருடப்பிறப்பு, திருக்குளத்தில் தெப்பல், உற்சவம் ஆகியவை இத்தலத்து முக்கிய விழாக்கள்ஆகும்.

    21. வக்கிர காளியம்மனை தொடர்ந்து தரிசனம் செய்து வந்தால் வாழ்வில் நிச்சயம் திருப்பம் ஏற்படும் என பக்தர்கள் கருதுகின்றனர்.

    22. சான்றோர் நிறைந்த தொண்டை நாட்டுத் திருக்கோவில்கள் முப்பத்து இரண்டினுள் முப்பதாவது திருக்கோவில் இது. இறைவன் சந்திரசேகரர், இறைவியின் திருநாமம் வடிவாம்பிகை.

    23. தஞ்சை நிசும்ப சூதனி, திருநல்லூர்க் காளி, ஆலம்பாக்கத்து அம்மன், பட்டி சுரம் துர்க்கை, சிதம்பரம் நான் முகநாயகி, தில்லை காளி, திண்டிவனம் கிடங்கில் கொற்றவை போன்ற அற்புதமான சிற்பங்களைப் போலவே, வக்கிர காளியின் திருவுருவம் எல்லா வகையிலும் தனிச்சிறப்புடன் விளங்குகிறது.

    24. நடராஜர் தன் இயல்பான தாண்டவத்தினின்றும் மாறுபட்டு இங்கே, ‘வக்கிர தாண்டவம்’ ஆடுவது குறிப்பிடத்தக்கது.

    25. சோழன் கோச்செங்கணான் இங்குள்ள பெருமாள் கோவிலைக் கட்டினான் என்பதிலிருந்து சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இத்திருத்தலம் பெருமையுடன் விளங்கியது என்பதை அறியலாம்.

    26. முதலாம் ஆதித்த சோழன் தொடங்கிப் பல சோழ மன்னர்கள் அந்த கோவிலை புதுப்பித்தும் விரிவு படுத்தியும் கட்டி வந்திருக்கிறார்கள்.

    27. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப்பெருமைகளையும் பெற்று பாடல் பெற்ற தலமாகவும் இது விளங்குகிறது.

    28. சைவ சமயக் குரவர்கள் தொண்டை மண்டலத்தில் முப்பது திருப்பதிகளைப் பாடி இருக்கிறார்கள். இதில் முப்பதாவது தலமாக விளங்குவது திருவக்கரை தலம்.

    29. திருமுறையில் சம்பந்தர் இந்த தலம் பற்றிப் பாடிய தேவாரப் பதிகங்கள் உள்ளன.

    30. புதுச்சேரியிலிருந்து பதிமூன்றாவது மைலில் புதுச்சேரி மயிலம் சாலையில் இந்த தலம் இருக்கிறது. பிரதான சாலையிலிருந்து இந்த தலம் சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் வடக்கில் உள்ளது.

    31. இந்த தலத்தின் பெருமையைக் குறிக்கும் பல கதைகள் வழங்குகின்றன.

    32. மேற்குப்பாகத்தில் அமைய வேண்டிய சத்தியோ- ஜாதம் என்ற முகம் இங்கே அமையவில்லை. கிருதயுகத்திலிருந்து திரேதாயுகம், துவாபரயுகம் என்று ஒவ்வொரு முகமாக உண்டாயிற்று என்றும் கலியுக முடிவில் மேற்குப் பக்கத்திலும் முகம் ஏற்படும் என்றும் கூறுகிறார்கள்.

    33. சாஸ்திரப்படி முக லிங்கங்களின் முகங்கள் வெவ்வேறு முறையில் அமைந்திருக்க வேண்டும். ஆனால் இங்கே லிங்கத்தின் மூன்று முகங்களும் வேறுபாடில்லாமல் அமைந்திருப்பது புதுமை.

    34. எலிபெண்டாக் குகைக் கோவில், பிரமன் ஸ்தாபித்த காளஹஸ்திக் குடைவரையிலுள்ள முகலிங்கம் ஆகிய இடங்களில் ஒவ்வொரு முகத்தை நோக்கியும் ஜன்னலோ, திறந்த வெளியோ இருக்கிறது. இங்கே அப்படி அமையவில்லை.

    35. அலைபுனலில் தவழ் வளை சில வைத்தருமணிதிரு வக்கரை யுறைவோனே அடியவர் இச்சையில் எவை எவை புற்றன அவை தரு வித்தருள் பெருமானே என்று அருணகிரிநாதர் இந்த தலத்திலுள்ள முருகப்பெருமானை வேண்டுகிறார்.
    சனியின் வக்கிரத்தினால் துன்பப்படுகிறவர்கள் திருவக்கரை வக்கிரகாளியம்மன் தலத்துக்கு வந்து சனிக்கோளை வணங்கினால். துன்பம் நிச்சயம் குறையும்,
    நவக்கிரகங்களில் சனி, குரு ஆகிய கோள்கள் தாம் சஞ்சரித்த ராசிகளிலேயே பின் நோக்கி சில சமயங்களில் சில நாட்களோ மாதங்களோ சஞ்சரிப்பதுண்டு. இதை ‘வக்கிரகதி’ என்று சொல்லுவார்கள்.

    சனியின் வக்கிரத்தினால் துன்பப்படுகிறவர்கள் திருவக்கரை வக்கிரகாளியம்மன் தலத்துக்கு வந்து சனிக்கோளை வணங்கினால். துன்பம் நிச்சயம் குறையும், நீங்கும் என்று நம்புகிறார்கள். அப்படிப்பலன் அடைந்தவர்கள் பலர் என்றும் சொல்லுகிறார்கள்.

    ஜாதகத்தில் சனி வக்கிரமாக உள்ளவர்கள் இங்கே வந்து பூஜித்துச் செல்லலாம். சனி பகவானின் வாகனமான காகம் தெற்கு நோக்கி இருப்பது இங்கே விசேஷம்.

    புன்முறுவல் பூக்க, அபயகரத்துடன் விளங்கும் அன்னை வடிவாம்பிகையின் வடிவழகைச் சொல்லி முடியாது. வக்ரகாளியம்மனுக்கு உகந்த 108 போற்றியை பார்க்கலாம்.
    ஓம்     அன்னையேபோற்றி
    ஓம்     அற்றல்     போற்றி
    ஓம்     அறமேபோற்றி
    ஓம்     அளகேபோற்றி
    ஓம்     அழகேபோற்றி
    ஓம்     அவமயம்போற்றி
    ஓம்     அவமிலாய்போற்றி
    ஓம்     அமலைபோற்றி
    ஓம்     அசலேபோற்றி
    ஓம்     அகலேபோற்றி
    -10
    ஓம்     அகம்போற்றி
    ஓம்     ஆசனம்போற்றி
    ஓம்     ஆக்ஞைபோற்றி
    ஓம்     ஆணைபோற்றி
    ஓம்     ஆத்தாபோற்றி
    ஓம்     ஆயேபோற்றி
    ஓம்     ஆரணிபோற்றி
    ஓம்     ஆலயம்போற்றி
    ஓம்     ஆவலேபோற்றி
    ஓம்     ஆற்றலேபோற்றி
    -20
    ஓம்     இனியவைபோற்றி
    ஓம்     இறைலைபோற்றி
    ஓம்     இளகியோய்போற்றி
    ஓம்     இயலேபோற்றி
    ஓம்     இமையோய்போற்றி
    ஓம்     இந்நலம்போற்றி
    ஓம்     இதமேபோற்றி
    ஓம்     இகமேபோற்றி
    ஓம்     இருளிபோற்றி
    ஓம்     இன்பம்போற்றி
    -30
    ஓம்     ஈஸ்வரிபோற்றி
    ஓம்     ஈசைபோற்றி
    ஓம்     ஈடிலாய்போற்றி
    ஓம்     ஈவோய்போற்றி
    ஓம்     ஈறிலாய்போற்றி
    ஓம்     உண்மைபோற்றி
    ஓம்     உற்றாய்போற்றி
    ஓம்     உறவேபோற்றி
    ஓம்     உளவேபோற்றி
    ஓம்     உமையேபோற்றி
    -40
    ஓம்     உத்தமிபோற்றி
    ஓம்     உன்னதம்போற்றி
    ஓம்     உணவேபோற்றி
    ஓம்     உதயம்போற்றி
    ஓம்     உழக்குவோய்போற்றி
    ஓம்     ஊகம்போற்றி
    ஓம்     ஊக்கம்போற்றி
    ஓம்     ஊசலேபோற்றி
    ஓம்     ஊட்டமேபோற்றி
    ஓம்     எல்லேபோற்றி
    -50
    ஓம்     எழிலேபோற்றி
    ஓம்     எண்கரம் உடையவளேபோற்றி
    ஓம்     எல்லாம்போற்றி
    ஓம்     கொந்தநாயகியேபோற்றி
    ஓம்     ஏகம்    போற்றி
    ஓம்     ஏடேபோற்றி
    ஓம்     எதிலாய்போற்றி
    ஓம்     ஐங்குணம்போற்றி
    ஓம்     ஐஸ்வரிபோற்றி
    ஓம்     ஐந்தேபோற்றி
    -60
    ஓம்     ஐயம்போற்றி
    ஓம்     ஒளியேபோற்றி
    ஓம்     ஒலியேபோற்றி
    ஓம்     ஓர்நிலைபோற்றி
    ஓம்     ஒளதம்போற்றி
    ஓம்     கனலேபோற்றி
    ஓம்     கயலேபோற்றி
    ஓம்     கண்ணேபோற்றி
    ஓம்     கற்பகம்போற்றி
    ஓம்     காளியேபோற்றி
    -70
    ஓம்     கிளியேபோற்றி
    ஓம்     குயலேபோற்றி
    ஓம்     குகையேபோற்றி
    ஓம்     குங்குமம்போற்றி
    ஓம்     குணமேபோற்றி
    ஓம்     குறையுளாய்போற்றி
    ஓம்     குணநிதிபோற்றி
    ஓம்     களவுமாரிபோற்றி
    ஓம்     கவுரிபோற்றி
    ஓம்     சண்டியேபோற்றி
    -80
    ஓம்     சஞ்சிகைபோற்றி
    ஓம்     சயமேபோற்றி
    ஓம்     துன்முகிபோற்றி
    ஓம்     சூலியேபோற்றி
    ஓம்     திருமகளேபோற்றி
    ஓம்     திங்களேபோற்றி
    ஓம்     துளசிபோற்றி
    ஓம்     தேவகிபோற்றி
    ஓம்     திருவக்கரையமர்ந்தாய்போற்றி
    ஓம்     மகாகாளிபோற்றி
    -90
    ஓம்     காளியேபோற்றி
    ஓம்     கரியவள்போற்றி
    ஓம்     கருமணிபோற்றி
    ஓம்     கண்மணிபோற்றி
    ஓம்     ஆரியள்போற்றி
    ஓம்     சீரியள்போற்றி
    ஓம்     சீர்மையேபோற்றி
    ஓம்     பேர் புகழ்போற்றி
    ஓம்     பெருமையேபோற்றி
    ஓம்     கருணையேபோற்றி
    -100
    ஓம்     கருணாம்பாள்போற்றி
    ஓம்     காளிகாம்பாள்போற்றி
    ஓம்     வடிவாம்பிகைபோற்றி
    ஓம்     அழகாம்பிகைபோற்றி
    ஓம்     அசலாம்பிகைபோற்றி
    ஓம்     குழல்மொழியேபோற்றி
    ஓம்     திருவக்கரையில் வாழும் வக்ரகாளிபோற்றி
    ஓம் சக்தி தாயே போற்றி...! போற்றி....!
    கன்னிப்பெண்களுக்கு நீண்ட நாட்களாக திருமணம் தடைப்பட்டு வந்தால் திருவக்கரை வக்கிர காளியம்மன் தலத்திற்கு வந்து பஞ்சக்கன்னி தோஷ பரிகாரம் செய்து கொண்டால் உடனடியாகத் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
    கன்னிப்பெண்களுக்கு நீண்ட நாட்களாக திருமணம் தடைப்பட்டு வந்தால் திருவக்கரை வக்கிர காளியம்மன் தலத்திற்கு வந்து கருவறையின் உள்சுற்றில் இருக்கும் கருங்கல் சுவருக்கு மஞ்சள் பூசி, பூஜை செய்து, ‘பஞ்சக்கன்னி தோஷம்‘ செய்து கொண்டால் உடனடியாகத் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. இதனால் ஏராளமான கன்னிப்பெண்கள் கருங்கல் சுவருக்கு மஞ்சள் பூஜை நடத்துகிறார்கள்.

    வக்கிர காளியம்மன் ஆலயத்தில் அம்மன் கோவிலுக்கு அருகில் தீபலட்சுமி கோவில் உள்ளது. நீண்ட நாட்களாகத் திருமணம் ஆகாதவர்கள் ராகு காலத்தில் திருவிளக்கேற்றி இந்த அம்மனை வணங்கி மாங்கல்யம் கட்டி விட்டு வந்தால் விரைவிலேயே திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
    திருமணமாகி நீண்ட நாட்கள் குழந்தை இல்லாத தம்பதியர் இந்த ஆலயத்திற்கு வந்து இங்குள்ள தல விருட்சமான வில்வ மரத்தை வலம் வந்து அம்மரத்தில் தொட்டில் கட்டிச் செல்கிறார்கள்.

    இப்படிச் செய்வதன் மூலம் விரைவிலேயே அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.அவ்வாறு குழந்தைப் பெற்றவர்கள் குழந்தையுடன் ஆலயத்திற்கு வந்து இறைவனை வழிபட்டுத் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி விட்டுத் திரும்புகிறார்கள். சில பெண்கள் குழந்தை வடிவ சிற்பங்களை வாங்கி வந்து பிரதிஷ்டை செய்து வழிபட்டு செல்கிறார்கள். அந்த வகையில் நிறைய குழந்தைகளின் கல் சிலைகள் அங்கு உள்ளன.
    திருவக்கரை தேவார பாடல் பெற்ற தலமாகும். வக்கிராசூரனை அழித்து பதினாறு கலைகளுடன் ராஜகோபுரத்தின் சமீபமாக வடக்கு முகமாக அமர்ந்ததால் வக்கிரகாளி என்ற திருப்பெயர் ஏற்பட்டது.
    நீண்ட நாட்கள் கடுந்தவம் புரிந்தான் வக்கிராசூரன். முடிவில் ஈஸ்வரன் தோன்றி வேண்டும் வரம் யாது என்று கேட்டார். தேவர் மூவரால் அழியாமலும், சிவலிங்கத்தை எப்போதும் தன் கண்டத்தில் வைத்திருக்கவும் வரம் கேட்டான். அப்போது ஈஸ்வரன் அசைவ உணவு நமக்கு ஆகாதே என்றார்.

    காலையில் பூசை செய்து உணவு உண்ட பிறகே சிவலிங்கத்தை கண்டத்தில் வைப்பேன் என்றான் அசுரன். சர்வேஸ்வரன் அவன் கேட்ட வரமளித்தார். வரம் பெற்றதும் தேவர்களைத் துன்புறுத்தினான்.

    தேவர்கள் பிரம்மாவிடம் செல்ல, அவர் தேவர்களுடன் மகா விஷ்ணுவிடம் முறையிட்டனர். உமையவள்தான் சாமுண்டியாக 16 கலைகளுடன் வராகி, இந்திராணி, கௌமாரி, சாமுண்டி, மகேஸ்வரி, வைணவி, பிராமி எனும் சப்தமாதர்களாகத் தோன்றினான். அவன் எட்டு திருக்கரங்களுடன் சூலம், வில், வாள், ஈட்டி, இருப்புலக்கை, தோமரம், பாசம், அங்குசம், பரசு ஆகிய ஆயுதங்களுடன் தோன்றி அழிக்கத்தக்கவள்.

    அவன் பெண்களால் அழிய வரம் பெறவில்லை. அவன் லிங்கத்தைக் கண்டத்தில் வைத்திருக்கும்போது கொல்ல முடியாது.- அசைவ உணவு உண்ண கடல்வழி செல்லும் போது அசுரன் தன் தங்கை காவலில் கண்டலிங்கத்தை வைப்பான். அப்போது அசுரனின் சகோதரியை முதலில் அழித்து பின் அவனையும் அழிக்கவேண்டும் என்று மகாவிஷ்ணு குறிப்பிட்டார்.

    அதன்படி மகாவிஷ்ணு ஈஸ்வரியை அழைத்து அசுரனை கொல்லும் வழிமுறைகளைக் கூறினார். ஈஸ்வரியும் 16 கலைகளுடன் பெரிய உருவம் எடுத்து மகாவிஷ்ணு யோசனைப்படி வக்கிர துர்முகியை அழித்து பின்னர் வக்கிராசூரனை அழித்து பதினாறு கலைகளுடன் ராஜகோபுரத்தின் சமீபமாக வடக்கு முகமாக அமர்ந்ததால் வக்கிரகாளி என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

    வக்கிரசூரன் வழிபட்டதால் இத்தலம் திருவக்கரை எனப் பெயர் பெற்றது. இவ்வாலயத்தின் வடக்குமுகமான காளியின் எதிரில் வக்கிரசூரன் சிலை உள்ளது. அவன் கண்டத்தில் வைத்திருந்ததால் கண்டலிங்கம் என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

    திருவக்கரை தேவார பாடல் பெற்ற தலமாகும் இது. திண்டிவனத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. 
    ×