ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதியில் இவரை தரிசனம் பின்னரே பெருமாளை வழிபட வேண்டும்

Published On 2020-06-01 09:51 GMT   |   Update On 2020-06-01 10:18 GMT
திருப்பதி திருமலையில் 'சுவாமி புஷ்கரணி' என்று அழைக்கப்படும் திருக்குளம் உள்ளது. இங்குள்ள இவரை தரிசனம் பின்னரே பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
திருப்பதி திருமலையில் 'சுவாமி புஷ்கரணி' என்று அழைக்கப்படும் திருக்குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் அருளும் வராக மூர்த்தியை தரிசித்து விட்டுத்தான், வேங்கடவனை தரிசிக்க வேண்டும் என்பது மரபு.

பெருமாள் திருமலையில் கோவில் கொள்ள, இந்த வராக மூர்த்திதான் இடம் கொடுத்ததாக திருப்பதி புராணம் கூறுகிறது.

இதற்கு நேர்மாறான வழிபாட்டு முறை, ஸ்ரீமுஷ்ணம் என்ற தலத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

அதாவது மூலவரான ஆதிவராக மூர்த்தியை தரிசிப்பதற்கு முன்னால், அங்கு அருளும் பிரசன்ன வெங்கடாஜலபதியைதான் முதலில் தரிசிக்க வேண்டும் என்பது அங்குள்ள மரபு.

Tags:    

Similar News