ஆன்மிகம்
கடவுளுக்கு ரூபாய் நோட்டால் அலங்காரம் செய்யலாமா?

கடவுளுக்கு ரூபாய் நோட்டால் அலங்காரம் செய்யலாமா?

Published On 2020-05-28 09:51 GMT   |   Update On 2020-05-28 09:51 GMT
சில கோவில்களில் ரூபாய் நோட்டுகளால் தெய்வத்தின் திருவுருவத்தை அலங்காரம் செய்கிறார்கள். இது முறைதானா? என்பதற்கான விடையை அறிந்து கொள்ளலாம்.
கோவில் உள்ள தெய்வத்திற்கு காய், கனிகள், பட்சணங்கள் இவற்றினால் அலங்காரம் செய்தல் உண்டு. ரூபாய் நோட்டுக்களால் செய்யும் பழக்கம் இப்போது ஏற்பட்டுள்ளது. இதை சாஸ்திர ரீதியாக மறுக்கவோ, ஏற்றுக்கொள்ளவோ இயலாது.

அந்தக்காலத்தில் பணப்பரிமாற்றத்திற்கு தங்கநாணயங்களை உபயோகித்தனர். மதிப்புள்ள பொருட்களை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் எண்ணத்தில் தங்கக்காசு மாலையை அணிவித்தனர்.

அதற்கு ஈடாக இன்று ரூபாய் நோட்டு இருக்கிறது. எண்ணெய் விளக்குக்குப் பதிலாக மின்விளக்குகளை கோவில்களில் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இறைவனுக்கு ரூபாய் நோட்டுகளை அர்ப்பணிக்கலாம் தவறில்லை.
Tags:    

Similar News